பாரியை பாராட்டிய ஜானி.. ‘ரெட்ரோ’ படம் பார்த்து ரஜினி கமெண்ட்

by Rohini |   ( Updated:2025-05-06 02:12:13  )
rajini_suriya
X

rajini_suriya

Retro Movie: சூர்யாவுக்கு நேரம் சரியில்லையா அல்லது வேறு எதும் காரணமா என தெரியவில்லை. தொட்டதெல்லாம் பொன் என்று சொல்வார்கள். ஆனால் சூர்யா விஷயத்தில் தொட்டதெல்லாம் மண்ணாகத்தான் மாறுகிறது. சமீபகாலமாக அவருடைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவர் நடிப்பில் கடைசி ஹிட் கொடுத்த படம் என்றால் அது சிங்கம் திரைப்படம்தான். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா எந்தவொரு வெற்றியையும் பெரிதாக கொடுக்கவில்லை.

ஆனால் சூறரை போற்று ஜெய்பீம் போன்ற படங்கள் மகத்தான வெற்றியை பெற்றது. அதுவும் ஓடிடியில் இந்த இரு படங்களும் ரிலீஸாகி வெற்றிபெற்றது. தியேட்டரிக்கல் வெற்றி என்பது சூர்யாவுக்கு நடக்கவே இல்லை. இன்னொரு பக்கம் அவர் மீது வலது சாரிகள் வன்மத்தையும் கக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஜோதிகாவின் தொடர் சர்ச்சைக்கருத்துக்களாலும் சூர்யாவின் மீது தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை பார்க்க முடிகின்றது.

சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சில பேர் படத்தில் சுவாரஸ்யம் இல்லை என்று கருத்துதெரிவித்து வருகின்றனர். இன்னும் சில பேர் சூர்யா நன்றாக நடித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து நல்ல நல்ல படங்களையே கொடுத்து வரும் நிலையில் சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படியான ஒரு படத்தை கொடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கங்குவா படம் எந்தளவு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது என அனைவருக்குமே தெரியும். அதன் பிறகு நிச்சயமாக ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு இருந்தார் சூர்யா.ஆனால் ரெட்ரோ படத்திற்கு வரும் விமர்சனங்களை பார்க்கும் போது எதிர்பார்த்த வெற்றி அமையவில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகின்றது.

#image_title

இந்த நிலையில் ரெட்ரோ படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்துவிட்டார் என்று கார்த்திக் சுப்பராஜ் அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ரெட்ரோ படம் ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் படத்தில் சூர்யாவின் பெர்ஃபாமன்ஸ் சூப்பர் என்றும் கடைசி 40 நிமிட காட்சி சூப்பர் என்றும் கூறியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார்.

Next Story