ரஜினிக்கு சொர்க்கத்தை காட்டியவர் இவர்தான்! வீட்டுக்கு போனதும் லதாவிடம் சொன்ன ஒரு விஷயம்
தமிழ் சினிமாவில் ஒரு பெருமைக்குரிய நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய வகையில் ரஜினியின் வளர்ச்சி அபாரமாக போய்க் கொண்டிருக்கின்றது. 80 90களில் கலக்கி வந்த ரஜினி இப்பொழுதும் அதே உத்வேகத்துடன் நடித்துக் கொண்டு வருகிறார்.
அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்கள். வயதாகிவிட்டது வேகம் குறைந்து விட்டது என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சு எழுந்தாலும் அவரைச் சார்ந்த பல பிரபலங்கள் "அப்படி சொல்பவர்கள் ஏமாளிகள் தான்" என்று கூறுகிறார்கள். சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவின் மகன் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பகிர்ந்தார்.
அந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஃபைட் முடிந்ததும் முகம் திரும்புவது போன்ற ஒரு காட்சி யாம். அதை ரஜினி சாதாரணமாக திரும்பிப் பார்த்தாலும் அவருடைய அந்த பார்வைக்கு ஏகப்பட்ட அர்த்தம் இருப்பதாக உணர முடிந்தது. அந்த அளவுக்கு அவருடைய முக பாவனைகளின் மூலமாகவே அனைவரையும் ஆட்டி
படைக்கிறார் என கூறினார்.
இதையும் படிங்க :ஷோபனா வீட்டில் திருட்டு! யாரும் இதுவரை கொடுக்காத தண்டனை! இப்படியும் ஒரு நடிகையா?
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ரஜினியை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்தார். ஒரு சமயம் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்த போது உருவான படம் தான் உழைப்பாளி. அந்த சமயத்தில் மிகவும் தைரியமாக அந்த படத்தை எடுத்தார் தயாரிப்பாளர் நாகி ரெட்டி. அந்தப் படத்தின் பூஜை சமயத்தில் நாகிரீட்டில் ரஜினிக்கு ஒரு சின்ன மூட்டையை பரிசாக கொடுத்தாராம். அதை கொட்டி பார்க்கும் பொழுது அதில் இருந்தது 108 தங்க காசுகள்.
அதுவரைக்கும் சாதாரண காசுகள் பணங்களையே பார்த்து வந்த ரஜினிக்கு முதல் முறையாக 108 தங்க காசுகளை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக இருந்ததாம். அதை அப்படியே வீட்டிற்கு கொண்டு போய் அவருடைய மனைவி லதாவிடம் கொடுத்து இதை நாம் சொந்த விஷயத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி உள்ளே வைக்கச் சொன்னாராம்.
அதன் பிறகு உழைப்பாளி படம் முடிந்த பிறகு அந்த தங்க காசுகளை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு வந்தாராம் ரஜினி. அங்கு வேலை பார்த்த அத்தனை ஊழியர்களுக்கும் இந்த தங்க காசுகளை பரிசாக கொடுத்தாராம்.