இவருக்கு இல்லப்பா எண்ட்! பொன்விழா ஆண்டில் டபுள் ட்ரீட் கொடுக்க தயாரான ரஜினி

by Rohini |
rajini 1
X

rajini 1

Rajini: பொன்விழா ஆண்டை நெருங்கும் ரஜினி திரைத்துறையில் இன்று ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக கோலோச்சி இருக்கிறார். அவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் எத்தனையோ போராட்டங்களை கடந்து இருந்தாலும் 1980 இல் இருந்து 89 வரைக்கும் தான் அவருடைய சாம்ராஜ்ய ஆண்டாக மாறியது. அந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மனதில் அசைபோட ஒரு மிகப்பெரிய சாதனையாளராக உருவெடுத்தார் ரஜினிகாந்த்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ரஜினி பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் 1980 ஆவது ஆண்டிற்கு பிறகு தான் ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார். அதிலும் குறிப்பாக பில்லா திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற முதல் படமாக மாறியது.

இதையும் படிங்க: தனுஷ் நல்லவரு தா… ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல… இது உலக மகா நடிப்பா இருக்கே…!

ரஜினிக்கு ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தையும் பெற்ற படமாக பில்லா திரைப்படம் விளங்கியது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ரஜினியை மாற்றிய திரைப்படமும் பில்லா திரைப்படம் தான். இன்று திரைத்துறையில் வணிக ரீதியில் வெற்றி பெறக்கூடிய ஒரு மாபெரும் நடிகராக முதல் இடத்தில் இருப்பதும் ரஜினி தான். படத்திற்கு படம் அவருடைய வணிக லாபம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

அனைத்து தரப்பு மக்களிடமும் மிக எளிதாக போய் தன்னை இணைத்துக் கொண்டார் ரஜினி. ஒவ்வொரு படத்திலும் அவருடைய பரிணாமங்களை நாம் காணலாம். இப்படி ரஜினியின் சினிமா வாழ்க்கையை லிஸ்ட் போட்டு பார்க்கும் பொழுது பிரமிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறார் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்தைத்தான் ஃபாலோ செய்ய போகிறாரா விஜய்? தளபதி 69 போஸ்டரின் ரகசியம்

அந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதி தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக இப்போது வந்த தகவல் தெரிவிக்கிறது. அதாவது ஜூன் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது .

அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது. அதனால் கூலி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏனெனில் அடுத்த வருடம் ஜூன் மாதம் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் அதே வருடம் தீபாவளி அன்று ஜெயிலர் 2 திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம் .

இதையும் படிங்க: வேட்டையன்ல ரஜினி, அமிதாப் வர்ற சீன் தெறிக்க விடுமாம்… அதோட பிளாஷ்பேக் இதுதான்!

அதனால் ஒரே நேரத்தில் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரு படங்களிலும் ரஜினி நடிக்கப் போகிறார் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். அடுத்த வருடம் என்பது ரஜினியின் பொன்விழா ஆண்டு. அதனால் இந்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் அது மேலும் ரஜினிக்கு ஒரு ஸ்பெஷல் வருடமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story