வசனத்தை கேட்டதும் செட்டை விட்டு வெளியேறிய ரஜினி!.. என்ன படம்னு தெரியுமா?..

Published on: January 19, 2023
rajini
---Advertisement---

ரஜினி என்றாலே அனல் பறிக்கும் வசனங்கள், பஞ்ச் டையலாக்குகள் என திரையரங்கையே அதிரவைக்கும் ஒரு நடிகர் தான் என்று ரசிகர்கள் இருமாப்பு கொள்வார்கள். அந்த அளவுக்கு பஞ்ச் டையலாக்குக்கு பேர் போனவர் தான் ரஜினி. இவர் நடித்த அனைத்து படங்களிலும் கண்டிப்பாக பஞ்ச் டையலாக்குகள் இருக்கும்.

பேரை கேட்டாலே சும்மா அதிருதுல என்ற டையலாக்குக்கு சொந்தக்காரரான ரஜினி ஆரம்ப காலங்களில் நீண்ட வசனத்தை பார்த்து செட்டை விட்டே பயந்து ஓடின சம்பவம் அரங்கேறியிருக்கிறது, 1977 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற திரைப்படம்.

Also Read

rajini1
rajini1

இந்த படத்தில் ரஜினி, சிவக்குமார், சுமித்ரா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கதை வசனம் எல்லாம் பஞ்சு அருணாச்சலம் தான். ஒரு சமயம் இந்த படத்திற்காக ஒரு காட்சியில் நடிப்பதற்கு வசனத்தை ரஜினியிடம் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டு முத்துராமன் சென்று விட்டாராம்.

இதையும் படிங்க : இத்தனை திரைப்படங்களை இயக்கியுள்ளாரா சந்தானபாரதி?!.. அட இது தெரியாம போச்சே!…

திரும்பி வந்து பார்த்தால் ரஜினியை காணவில்லையாம். கேட்டதற்கு வசனத்தை படித்து பார்த்து விட்டு கோபமாக ஸ்டூடியோவிற்கு வெளியே சென்று கொண்டிருக்கிறார் என்று சொல்ல முத்துராமன் ஆள்களை விட்டு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். ஏன் என்னாச்சு என்று முத்துராமன் கேட்க ஆச்சரியத்தை தரும் பதிலை கூறினாராம் ரஜினி.

rajini2
rajini2

படம் முழுக்க பேசினாலும் பாலசந்தர் இவ்ளோ டையலாக்குகள் கொடுக்க மாட்டார். நீங்கள் இந்த ஒரு காட்சிக்கு இவ்ளோ பெரிய டையலாக்கை கொடுத்தால் எப்படி பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு கோபப்படாமல் முத்துராமன் உனக்கு எவ்ளோ முடியுமோ சொல்லு, ஷார்ட் ஷார்டா வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி சமாதானம் படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

ஒரு டையலாக்கை பார்த்து பயந்து போன ரஜினியை தலைவர் எப்பொழுது வசனம் பேசுவார் என்று ஏங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது அவரது கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் என்று முத்துராமன் கூறினார்.