ரஜினியின் ஆசையை கேட்டு ஆடிப்போன பாலசந்தர்… கைக்கொடுத்த எம்.ஜி.ஆர்!…

Published on: September 13, 2023
---Advertisement---

Rajinikanth wish: ரஜினிகாந்திற்கு ஸ்ரீராகவேந்திரர் மீது இருக்கும் பிரியம் என்பது உலகறிந்த செய்தி தான். அவருக்கு எப்போதுமே அவர் மீது ப்ரியம் அதிகம். ஆனால் அவரால் ஒவ்வொரு தயாரிப்பாளர், இயக்குனரிடம் கெஞ்சிய சம்பவமும் நடந்து இருக்கிறதாம்.

நண்பரின் மூலம் ராகவேந்திரரின் புகழை அறிந்த ரஜினிகாந்த் அதில் இருந்து அவர் எடுத்த எல்லா முடிவுகளையுமே அவரை மனதில் வைத்து தான் செய்வாராம். திரைப்பட கல்லூரியில் பயிற்சி பெற்று நடிகரான பின்னர் கூட எப்போதுமே ராகவேந்திரரை நினைக்காமல் இருக்கவே மாட்டார்.

இதையும் படிங்க: LCUவுக்கு தலையாட்டிய தலைவர்!.. அந்த உச்ச நடிகரையும் உள்ளே இழுக்க லோகேஷ் கனகராஜ் பலே ஸ்கெட்ச்!..

ஒருநாள் ராகவேந்திரர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரொம்பவே விரும்பி இருக்கிறார். இதை தன்னுடைய சக திரை நண்பர்களிடம் சொன்ன போது ஏன் உங்களுக்கு இந்த வேலை. இப்போது தான் வளர்ந்து இருக்கீங்க எனக் கூறி இருக்கின்றனர்.

ராகவேந்திரர் படத்தினை எடுத்து கொடுத்தால் இன்னொரு படம் நடித்து தரேன் என அவர் ஆபர் கொடுத்தும் கூட யாருமே முன்வரவில்லை. இப்படி இருக்கையில் ரஜினியினை அறிமுகம் செய்த பாலசந்தர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். உடனே உனக்கு என்னப்பா வேணும் எனவும் கேட்டாராம்.

இதையும் படிங்க: தற்கொலை பண்ணிக்க நினைச்ச ரஜினிகாந்த்… நண்பர் சொன்ன கதையால் சூப்பர்ஸ்டாராக மாறிய ஆச்சரியம்!

இப்படத்தில் முத்துராமன் சில கமர்ஷியல் காட்சிகளையும் வைத்திருந்தார். ஆனால் பாலசந்தர் அதுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். நட்டமே ஆனாலும் எல்லாம் ரஜினிக்காக என்றாராம். அந்த சமயம் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு வரி விலக்கு கொடுத்து இந்த படத்தினை நஷ்டப்படாமல் பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.