rajini with fan

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தீவிர ரஜினி ரசிகர். இவர் அதே பகுதியில் மாந்தோப்பு பரோட்டா கடை என்ற பெயரில் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா வழங்கி வருகிறார். விலைவாசி உயர்ந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக இதே விலையில் புரோட்டா விற்பனை செய்து வருகிறார். இவரது சேவை சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இவரது கடையின் பெயர் பலகையில் ரஜினிகாந்தின் புகைப்படம் பிரதானமாக இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ரசிகர் ஒருவர் நீண்ட நாட்களாக இந்த அற்புத சேவையை நடத்தி வருவதை அறிந்த ரஜினிகாந்த் அவரை சந்திக்க ஆசைபட்டார்.உடனடியாக அவரை குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அல்போன்ஸ் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்தார். அல்போன்ஸை நேரில் சந்தித்த ரஜினி, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் அல்போன்ஸிற்கு தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அல்போன்ஸ் கூறியபோது, தலைவரை சந்திப்பது என் வாழ்நாள் கனவு. நான் செய்யும் சேவையை அறிந்து அவரே என்னை அழைத்து பாராட்டியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல காலம் இந்த சேவையைத் தொடருவேன் என்று கூறினார்.