ரஜினிகூட அங்க போனது தப்பா?..கிசுகிசுல சிக்கி பாடாய்பட்ட நடிகை!..

சினிமாவில் ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை அந்தஸ்தான இடத்தில் இருக்கிறார் என்றால் அவர்களை பற்றி புகழ் பாடுகிறார்களோ இல்லையோ வதந்திகளை பரப்பி வருவார்கள்.
இந்த வதந்திகளுக்கு எத்தனையே நடிகர் நடிகையில் வாழ்க்கை சூரையாடப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
எம்.ஜி.ஆர் நடிகை என்று பெயர் வாங்கப்பட்ட நடிகை லதாவுடன் ரஜினியை இணைத்து அன்றைய பத்திரிக்கைகள் தன் இஷ்டம் போல எழுதி தள்ளியிருக்கின்றன. இவர்கள் இருவரை பற்றியும் தேவையில்லாத கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன.
இதையும் படிங்க : பாதாளத்தில் கிடக்கும் பாலிவுட்!..ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த சூர்யா-ஜோதிகா…
இருவரும் ஆயிரம் ஜென்மங்கள், சங்கர் சலீம் சைமன் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த கிசுகிசுக்களை பற்றி நடிகை லதாவிடமே கேட்ட போது ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி டேமில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நானும் என்னுடன் நடித்த நடிகையும் அந்த டேமில் உட்காந்து பேசிக் கொண்டிருப்போம்.அப்போது ரஜினியும் வந்து எங்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து பேசிக்கொண்டிருப்பார். இப்படி தான் ஆரம்பித்தது எங்கள் நட்பு. ஆனால் இதை ஏன் பத்திரிக்கை நண்பர்கள் அப்ப்டியெல்லாம் எழுதினார்கள் என்று இதுவரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ரஜினி சினிமாவிலேயே இருக்கும் ஒரு நல்ல மனிதர் என்று நடிகை லதா தெரிவித்தார்.