ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள்!.. இப்போதைய அவர்களின் நிலை?..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- இந்த ஒரு வார்த்தை தான் இப்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரமாக மாறிவிட்டது. 80களில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தவர் இன்றளவும் அதை விடாமல் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கே டஃப் கொடுக்கும் வைகையில் தனது படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் தனது அறிவுரைகள், எதார்த்தமான மேடைப் பேச்சுகளின் மூலமும் மக்களை கவர்ந்து வருகிறார்.
பிரபலங்களுக்கு பிடித்தமான கலைஞனாக ரஜினி வலம் வந்து கொண்டிருக்கிறார். யாரை கேட்டாலும் எனக்கு பிடித்தமான நடிகர் ரஜினி தான் என்று பல பேர் சொல்ல கேட்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்று பல பிரபலங்கள் முன்னனி நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு காலத்தில் ரஜினி படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்களாகவே இருப்பார்கள்.
அந்த வகையில் நடிகை மீனா பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ரஜினியுடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதே மீனா தான் ரஜினியின் சரியான ஜோடி என்று சொல்லுமளவிற்கு ஏராளமான படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
அடுத்ததாக நடிகை ஷாலினி ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். ரஜினியுடன் தனது சுட்டியான பேச்சால் அனைவரையும் ஈர்த்தார். அதன் பின் வளர்ந்து ஹீரோயினாக ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்து பின் அஜித்தின் காதல் மனைவியாக மாறிவிட்டார்.
நடிகர் தருண் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். அதன் பின் ரஜினி நடித்த தளபதி படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் மலையாள உலகின் முன்னனி ஹீரோவாக உயர்ந்தார்.
பாலிவுட்டின் காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். ஹிந்தியில் ரஜினி நடித்த பக்வான் தாதா என்ற படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார் ஹ்ரித்திக் ரோஷன். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னாளில் மீனாவை கவர்ந்த ஹீரோவாக மாறினார். சொல்லப்போனால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடும் நடிகராக வளர்ந்தார்.