கண்டக்டர் ஆவதற்கு முன் ரஜினி இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்காரா?!.. ஆச்சர்ய தகவல்!...
நடிகர் ரஜினி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். நடிப்பு கல்லூரியிலும் பயிற்சி எடுத்தார். பல வருட முயற்சிகளுக்கு பின் பாலச்சந்தர் இவரை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார்.
அதன்பின் வில்லனாக சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் ஹிட் அடிக்கவே ஹீரோவாக மட்டுமே நடித்தார். ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்ததுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் பல வேலைகளை செய்துள்ளார். ரஜினியை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ரஜினி, சிரஞ்சீவி, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த ராணுவ வீரன் படத்தின் படப்பிடிப்பு ஒரு ரைஸ் மில்லில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது.
அந்த மில் ஓனர் படப்பிடிப்புக்கு அதிக பணம் கேட்டார். எனவே, ரஜினியை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு நான் அவரிடம் பேச சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் ரஜினியை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை மேலே ஏறி சட்டை கூட இல்லாமல் துங்கி கொண்டிருந்தார். நான் ரஜினியை எழுப்பி கீழே கூட்டி வந்தேன்.
‘சட்டை கூட இல்லாமல் அரிசி மூட்டை மீது தூங்குகிறாயே. தோல் அரிக்குமே’ என்றேன். ரஜினியோ ‘எனக்கு அரிக்காது சார்’ என்றார். ‘உனக்கு மட்டும் என்ன.. நீயும் மனிதன்தானே’ என கேட்டேன். அதற்கு ரஜினி ‘நான் கண்டக்டர் ஆவதற்கு முன் ஒரு மில்லில் அரிசி மூட்டையை தூக்கும் கூலியாக கூட வேலை செய்துள்ளேன். எனவே, எனக்கு அது பழகிவிட்டது’ என சொன்னார். அதுதான் ரஜினி’ என எஸ்.பி.முத்துராமன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நாட்டுச்சரக்கு நச்சின்னு இருக்கு!.. புடவையை விலக்கி அந்த இடத்தை காட்டும் ரேஷ்மா…