RajiniKamal:ரஜினியும் கமலும் இப்படி மாறிட்டாங்க.. சினிமா எப்படி நல்லா இருக்கும்? கொந்தளித்த இயக்குனர்

kamalrajini
RajiniKamal: பிரபல சினிமா இயக்குனர் ஆர்வி உதய குமார் இன்றைய ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள். அதில் ரஜினியும் கமலும் கூட இப்படி மாறிவிட்டார்களே என்று ஒரு மேடையில் பேசி தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். இதோ அவர் பேசியது: நாம் படம் எடுக்கும்போது கூட ஒரு நாலு சீனாவது கவிதை மாதிரி எடுக்க வேண்டும் என நினைப்போம். அப்பவே சொன்னார்கள் இதெல்லாம் போர் அடிக்கும் என்று. அதையும் மீறி அதை போரடிக்காத வகையில் எப்படி எடுக்கிறது என முயற்சி செய்வோம்.
இப்போ அதற்கெல்லாம் அவசியமே இல்லை. பெரிய பெரிய ஆயுதங்களாக இருக்கின்றது. நம் கண்ணிலயும் கற்பனையிலும் பார்த்திருக்க முடியாத ஆயுதங்களாக இருக்கின்றன. அதில் இருந்து குண்டுகள் வெளி வருகின்றன. அது எதுக்கு வருகிறது, யாரை நோக்கி வருகிறது என்று யாருக்குமே தெரியாது .

இப்படி எல்லாம் விதவிதமாக துப்பாக்கிகள் இருக்கின்றன. எதார்த்த வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதாவது இந்த மாதிரி ஆயுதங்களை பார்த்து இருக்கிறீர்களா. இந்த மாதிரி எதார்த்தம் இல்லாத துப்பாக்கிகளை பீரங்கிகளை கையில் எடுத்து போராடும் ஹீரோக்களாக ரஜினியும் கமலும் மாறிவிட்டார்களே என்பதுதான் கொடுமை. எப்படி சினிமா நல்லா இருக்கும் .தரமான படங்களிலேயே நடித்து பெயர் வாங்கி தரமான இயக்குனர்களுடன் கைகோர்த்து தரமான தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹீரோக்கள் எல்லாம் இன்று என்ன மாதிரியான படங்களில் நடிக்கிறார்கள்.
போனா போகுது தமிழ் சினிமாவையும் தமிழ் பண்பாட்டையும் காப்பாற்றுகிற ஒரு படத்திலாவது இடையில் நடித்து விடுங்கள். உதயகுமார் இப்படி எல்லாம் பேசுகிறார் என்றால் அவருக்கு படங்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை. நான் அந்த மாதிரி படங்களை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. நாம் எடுக்கிற கதையில் நடிக்க நடிகன் ரெடியாக இருந்தால் மட்டும்தான் படத்தை எடுக்க வேண்டும். சிவாஜி சாரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். ‘அப்பா எப்படிப்பா? எத்தனை படங்களில் எத்தனையோ கேரக்டர்களில் உங்களால் மட்டும் நடிக்க முடிகிறது?

உங்களுடைய நடை ஒரு மாதிரி, உங்களுடைய முக பாவனை ஒரு மாதிரி, எப்படிப்பா உங்களால் மட்டும் முடிகிறது’ என்று கேட்டதற்கு அதற்கெல்லாம் நான் காரணம் இல்லடா. ஒருத்தன் கதை வந்து சொல்லுகிறான் என்றால் அதற்கும் அவனுக்கும் நான் அடிமையாகி விடுவேன். இந்த கதாபாத்திரத்திற்குள் நான் புகுந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்ப இருக்கிற நடிகர்கள் என்ன பண்ணுகிறார்கள்? ஒரு படம் அதாவது விதவிதமான ஆயுதங்களை ஏந்தி கொண்டு சுடுகிற படங்கள் வெற்றி அடைந்தால் அதே மாதிரி ஆயுதங்களை மீண்டும் தூக்கிக்கொண்டு அதே மாதிரியான கதைகளில் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.
சிவாஜி சார் சொன்னாரே ‘நான் 150 படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய ஒரு படத்தில் எடுத்த குளோசப்பை இன்னொரு படத்தில் பயன்படுத்த முடியாது’ என்று. இன்றைக்கு இருக்கிற ஹீரோக்களின் முகத்தை எடுத்து எந்த படத்தில் வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். படத்திற்கு படம் வித்தியாசம் எப்படி வரும். படத்திற்கு படம் இயக்குனர்களை மாற்றி அந்த டைரக்டர் சொல்லுவதைக் கேட்டு நீங்கள் நடித்தீர்கள் என்றால் அந்த இயக்குனர்களின் படைப்புத்திறனில் இருந்து வெளி வருகின்ற கதாபாத்திரம் வேறு மாதிரியாக இருக்கும்.
அந்த மாதிரி கதாபாத்திரங்கள் வரும் பொழுது அந்த திரைப்படம் அந்த நடிகருக்கும் சரி அந்த தயாரிப்பாளருக்கும் சரி ஒரு வித்தியாசமான படமாக அமையும். ஆனால் வித்தியாசத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை .வருமானம் வருகிறதா. 250 கோடி வருகிறதா. அவ்வளவுதான். அந்தப் படம் நாஸ்தியா போனாலும் சரி .ஜனங்கள் பார்க்க முடியாத படமாக இருந்தாலும் சரி. நடித்து விடுவோம். இதுதான் கார்ப்பரேட் கொள்கை .அந்த கார்ப்பரேட் கைக்கு என்றைக்கு சினிமா போனதோ அதோட அழகியல் வாழ்வியல் சமுதாய கண்ணோட்டம் எல்லாமே போய்விட்டது இதுதான் உண்மை என ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.