Connect with us
ialayraja

Cinema History

இரண்டு இயக்குனர்கள் மாறி!.. நம்பிக்கை இல்லாமல் ரஜினி நடித்த திரைப்படம்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

ஒரு படத்தில் நடிக்கும்போது இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். அதாவது, அப்படத்தின் கதையின் மீதும், இயக்குனர் மீது அந்த நடிகருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லையேல் நடிப்பதில் ஆர்வம் காட்ட முடியாது. இது சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும்.

சில சமயம் இயக்குனர் மீது நடிகருக்கு நம்பிக்கை இருக்காது. இது குழப்பத்தை ஏற்படுத்தும். இது சின்ன நடிகருக்கு நடந்தால் பரவாயில்லை. பல வெற்றிப்படங்களை கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே இது நடந்திருக்கிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தவர் இசைஞானி இளையராஜா.

இதையும் படிங்க: மலேசியாவின் குரலில் ரஜினிக்கே தெரியாமல் பாட்டு… அப்புறம் நடந்த சிக்கல்தான் ஹைலைட்!

அவருக்கு பாவலர் கிரியேசன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. எனவே, அவருக்கு ஒரு படம் நடித்து கொடுக்க ரஜினி சம்மதித்தார். ராஜாவின் சகோதரர் பாஸ்கர் பெயரில் இப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படி ரஜினியுடன் ராதா, நதியா, ஆனந்தராஜ், ஜனகராஜ், ராதாரவி என பலரும் நடித்து 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் ராஜாதி ராஜா. இப்படத்தை இயக்கியது ஆர்.சுந்தர்ராஜான்.

Rajathi raja

ஆனால், இப்படத்தை முதலில் இயக்கவிருந்தது இவர் இல்லை. அப்போது ரஜினியின் சில வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர் கலைமணி. அவர் அப்போது இயக்குனராகவும் மாறி இருந்தார். எனவே, அவரே இயக்கட்டும் என இளையராஜா ஆசைப்பட்டார். எனவே, கலைமணி ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னார். அதற்கு அவர் வைத்திருந்த தலைப்புதான் ராஜாதி ராஜா.

இதையும் படிங்க: நின்னு போன படம்! ரஜினி கேமியோ ரோலில் நடித்து 100 நாளை தாண்டி ஓடிய சம்பவம்

அதன்பின் இந்த படம் பற்றி ஒரு பேச்சும் இல்லை. அதன்பின் செல்வகுமார் என்பவர் ரஜினியை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருப்பதாகவும், அவர்தான் படத்தை இயக்கப்போகிறார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. அதன்பின்னர்தான் ஆர்.சுந்தர்ராஜான் இயக்குவது முடிவானது. 2 இயக்குனர்கள் மாறினாலும் கலைமணி வைத்த ராஜாதி ராஜா தலைப்பு மட்டும் மாறவில்லை

சுந்தர் ராஜனின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லாத ரஜினி இளையராஜாவிடம் ‘உங்கள் தம்பி கங்கை அமரனையே இயக்க சொல்லுங்கள்’ என சொல்ல, சுந்தர்ராஜன் மீது நம்பிக்கை வைத்திருந்த ராஜா, ‘அவர் நல்லா படம் எடுப்பார். படம் கண்டிப்பா ஹிட் ஆகும். நீங்கள் நம்பி நடியுங்கள். இந்த படம் ஓடலன்னா நான் ஆர்மோனியத்தலையே கை வைக்க மாட்டேன்’ என சொல்லி இருக்கிறார். அப்படி ரஜினி நடித்த ராஜாதி ராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரஜினியையே ஆச்சர்யப்படுத்தியது.

google news
Continue Reading

More in Cinema History

To Top