ஒரே ஆண்டில் இத்தனை படங்களா??... மாசத்துக்கு ஒன்னு ரிலீஸ்… ரஜினிகாந்த் பற்றிய மாஸ் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். அதுவும் குறிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து எண்ணிலடங்கா திரைப்படங்களை நடித்தவர் ரஜினி.
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெறுவதற்கும் முன்பே டாப் நடிகராக வலம் வந்தவர். அப்போதே ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வலை போட்டு இழுத்தவர்.
தனது முடி கோதும் ஸ்டைலால் பலரையும் அசரவைத்த ரஜினிகாந்த், தமிழ் ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து,இப்போது தலைவர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த மூன்று தலைமுறையினரையும் தனது ஸ்டைலான நடிப்பால் கவர்ந்த ரஜினிகாந்த் தொடக்க காலத்தில் ஒரு ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அப்படி அவர் ஒரே ஆண்டில் 20 திரைப்படங்களில் நடித்துள்ளாராம். அதாவது 1980 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 20 திரைப்படங்களில் அவர் கதாநாயகராக நடித்திருக்கிறார். அதில் 11 திரைப்படங்கள் அந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது.
“காளி”, “முரட்டுக்காளை”, “பில்லா”, “ஜானி”, “பொல்லாதவன்”, “நான் போட்ட சவால்”, “எல்லாம் உன் கைராசி”, “நட்சத்திரம்”, “அன்புக்கு நான் அடிமை” என தமிழில் அவர் நடித்த பல திரைப்படங்கள் அந்த ஒரு ஆண்டே வெளிவந்தது.
மேலும் “ராம் ராபர்ட் ரஹீம்”, “மயாதாரி கிருஷ்ணடு” போன்ற தெலுங்கு திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அன்றைய காலத்தில் இப்படி ஒரு வருடத்திற்கு பத்து ரஜினி திரைப்படங்கள் வெளிவந்த காலம் எல்லாம் போய், தற்போது அவரது திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். ரஜினியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியை பார்த்தால் விசித்திரமாகத்தான் இருக்கிறது.