ரஜினிகாந்த் டிவி விளம்பரத்தில் நடிச்சிருக்காரா? அதுவும் எந்த பிராண்ட் தெரியுமா?
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், கோடிக்கணக்கான ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருப்பவர். ரஜினிகாந்த் திரையில் வந்தாலே போதும், விசில் சத்தம் பறக்கும். திரையரங்குகளில் ரஜினிகாந்த்தின் படங்கள் வெளிவந்தால் அன்று தமிழ்நாட்டுக்கே திருவிழாதான்.
ரஜினி நடித்த விளம்பரப்படம்
இவ்வாறு தனது தனித்துவமான வசீகர நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ரஜினிகாந்த், எந்த ஒரு விளம்பரப்படங்களிலும் நடித்ததில்லை என்று கூறுவார்கள். ரஜினி ஒரு வெள்ளித்திரை நாயகன், அவரை சின்னத்திரையில் பார்க்க முடியாது என ரசிகர்கள் பலரும் கூறுவார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் 1980களில் ஒரு விளம்பரப்படத்தில் நடித்திருக்கிறார். ஆம்! அதாவது 1980களில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு குளிர்பான கம்பெனியின் விளம்பரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
Palm Cola
இந்த குளிர்பானத்தின் பெயர் “Palm Cola”. இது தமிழ்நாடு அரசு விநியோகம் செய்த ஒரு குளிர்பானம் என கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு இடைவேளையில் இந்த குளிர்பானத்தை குடிப்பது போன்று இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவருடன் ஒரு நடிகையும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.
மிகவும் ஸ்டைலாக அந்த குளிர்பானத்தின் மூடியை திறந்து அந்த குளிர்பானத்தை குடிக்கிறார் ரஜினிகாந்த். இவ்வாறு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த ஒரே கம்மெர்சியல் விளம்பரப்படம் இது மட்டும்தான் என கூறப்படுகிறது.
இத்தனை நாள் ரஜினிகாந்த் விளம்பரப்படங்கள் நடித்ததில்லை என்றே பல ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால் தற்போது ரஜினிகாந்த் நடித்த விளம்பரப்படம் குறித்து தெரியவந்திருக்கிறது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு வந்த கடிதம்… பின்னாளில் கவிஞரின் வாழ்க்கையையே மாற்றிய தரமான சம்பவம்!!