Cinema News
தூக்கமே இல்லாமல் உழைக்கும் நெல்சன்… ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா??
ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி என பலரும் நடித்து வருகின்றனர்.
“ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதால், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்சன் இத்திரைப்படத்திற்காக இரவு பகல் பாராது உழைத்து வருகிறாராம்.
வெறும் 4 மணி நேரம்தான் தூங்குகிறாராம். இவ்வாறு “ஜெயிலர்” திரைப்படத்திற்காக நெல்சன் அயராது உழைக்கிறாராம். இதனை பார்த்த ரஜினிகாந்த் நெல்சனிடம் சில அறிவுரைகளை கூறினாராம்.
“முதலில் உங்க உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க. ரொம்ப சிரமப்பட வேண்டாம். ஓடுற படம்தான் ஓடும். அதனால் தைரியமா இருங்க” என ரஜினிகாந்த் நெல்சனிடம் கூறினாராம்.
நெல்சன் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் நெல்சனை மிக மோசமாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நாம் யார் என்பதை காட்டிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் நெல்சன் உறக்கமே இல்லாமல் உழைத்து வருகிறாராம்.
இதையும் படிங்க: தூக்கமே இல்லாமல் உழைக்கும் நெல்சன்… ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா??