பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் வைகைப் புயல்… கலக்கல் காம்போ இஸ் பேக்…

Chandramukhi
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Rajinikanth
“ஜெயிலர்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்திற்காக இரண்டு திரைப்படங்களை ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் ஒரு திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாகவும், மற்றொரு திரைப்படத்தை மணி ரத்னம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இதையும் படிங்க: தனுஷ் தவறவிட்ட ஷங்கர் திரைப்படம்… பின்னாளில் சூப்பர் ஹிட் ஆன தரமான சம்பவம்…

Rajini and Cibi Chakravarthy
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதர்வாவை வைத்து இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது “தலைவர் 170” திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து இயக்கும் “தலைவர் 170” திரைப்படத்தில் ரஜினியுடன் காமெடி நடிகர் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu
வடிவேலு இதற்கு முன் “வள்ளி”, “முத்து”, “சந்திரமுகி”, “குசேலன்” ஆகிய திரைப்படங்களில் ரஜினிகாந்த்துடன் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்துதான் தற்போது “தலைவர் 170” திரைப்படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலு தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.