இதுவரைக்கும் உடைச்சது பத்தாதா?.. மீண்டும் லைகாவை மொட்டையடிக்க முடிவு பண்ணிட்டாராம் ரஜினிகாந்த்!..

#image_title
ஹாட்ரிக் தோல்வி கண்ட பிறகும் லைகா நிறுவனத்தை பார்த்தால் ரஜினிகாந்துக்கு பாவமாக இல்லையா என்று தான் கோடம்பாக்கத்தில் பலர் பேசத் தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம் மூன்று படங்களை லைகா நிறுவனம் தன்னை வைத்து இயக்கிய நிலையிலும், ஒரு படத்தில் கூட சம்பாதிக்கவில்லையே என்பதால் ரொம்பவே வருத்தமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் இன்னொரு படத்தையும் லைகா நிறுவனத்துக்கு கொடுத்து அதை தூக்கி நிறுத்த முடிவு செய்துவிட்டாராம்.
விஜய் நடித்த கத்தி படத்தை லைகா நிறூவனம் தயாரித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், அதன் பின்னர், ரஜினிகாந்த், அஜித் குமார் என பல முன்னணி நடிகர்களும் லைகா தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்தனர்.

தர்பார், லால் சலாம், வேட்டையன் என தொடர்ந்து ஒவ்வொரு பட தோல்விக்குப் பிறகும் ரஜினிகாந்த் மீண்டும் லைகாவுக்கு சான்ஸ் கொடுத்து வரும் நிலையில், அந்த படங்களும் தொடர்ந்து வசூலில் சரியான அடியை வாங்கியது தான் லைகா நிறுவனமே தயாரிப்பு நிறுவனத்தை விட்டு ஓடும் நிலைக்கு செல்ல காரணம் என்கின்றனர்.
போதாக்குறைக்கு கமல்ஹாசன் தன் பங்குக்கு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என லைகா நிறுவனத்தை மொட்டை அடித்துவிட்டார். அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படமும் லைகாவுக்கு வீண் முயற்சியாகவே மாறியது.
விஜய் மகன் இயக்கும் படத்தை தற்போது தயாரித்து வரும் லைகா நிறுவனத்துக்கு எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என ரஜினிகாந்த் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படமும் லைகா நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அடுத்த படமாவது அந்த நிறுவனத்துக்கு லாபத்தைக் கொடுத்தால் சந்தோஷம் தான்.