Home News Reviews Throwback Television Gallery Gossips

ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை..

Published on: February 28, 2024
---Advertisement---

Rajinikanth: ரஜினிகாந்துக்கு சினிமா பார்ப்பது என்றால் அத்தனை பிரியம். ஆனால் பள்ளி நேரத்தில் கட் அடித்து விட்டு சினிமா பார்க்க சென்றதை குடும்பத்தினர் கண்டுபிடித்து விட அதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கிறார். ஆனால் அதிலும் அவருக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்த ஆச்சரிய தகவல்கள் உங்களுக்காக.

ரஜினிகாந்த் வீட்டில் நிறைய பேர் இருந்ததால் அவரும் அவர் தந்தை ரானோஜி ராவும் வெளியில் படுத்து உறங்குவார்கள். தந்தை தூங்கியவுடன் தன்னிடம் உள்ள மூன்று தலையணைகளையும் சினிமாவில் பார்ப்பது போல ஆள் இருக்கும்படி செட் செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் பசவேஸ்வரா டூரிங்கிற்கு சென்றுவிடுவாராம்.

இதையும் படிங்க: பாட்ஷாவில் போட்ட சபதத்தை பாபாவில் நிறைவேற்றிய பிரபலம்… அப்படி என்னதான் நடந்தது?

ஆனால் அங்கு பழைய திரைப்படம் தான் திரையிடுவார்கள். இருந்தும் படம் பார்க்கும் அனுபவத்திற்காகவே தினமும் அங்கு படம் பார்க்கச் செல்வாராம் ரஜினிகாந்த். ஆனால் படத்தின் இறுதியை பார்க்க மாட்டார் படம் முடியும் சில நிமிடங்களுக்கு முன்னரே கிளம்பி வந்து தந்தையுடன் படுத்துக் கொள்வார்.

ஏனெனில் படம் முடித்து வரும் மக்களின் சத்தத்தால் தந்தை சில நேரம் முழித்துக் கொள்வதை ரஜினிகாந்த் கவனித்து இருக்கிறார். இப்படியே தினமும் தூக்கத்தை விடுத்து சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில், ஜெகதேகவீரனி கதா திரைப்படத்தின் விறுவிறுப்பு ரஜினியை கிளைமாக்ஸ் வரை உட்கார வைத்துவிட்டது. படம் முடிந்து வெளியில் வந்த ரஜினிக்கு மழை பெய்து பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாம்.

இதையும் படிங்க: எங்க அப்பா சரியான மிலிட்ரி… அந்த ஒரு விஷயத்தை சரியா செஞ்சிருக்கணும்… தளபதி சொல்லும் சீக்ரெட்