போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது ரஜினி இதை செய்வார்!.. இதற்கு இவ்வளவு சக்தியா?!...

ரஜினிகாந்த் சில பிரபலங்களுடன் போஸ் கொடுக்கும் போது ஒன்றை செய்வதாக கூறப்படுகிறது. அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக பற்று உள்ளவர். அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். யோகாவிலும் அவருக்கு தனி கவனம் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கும் முத்திரைகளுக்குமே ஒரு தனி பந்தம் இருக்கும். பாபா படத்தில் அவர் காட்டிய ஹஸ்த முத்திரை எல்லா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

Rajinikanth
இந்த முத்திரை உலகம் முழுக்க பிரபலமானது டியோ என்ற அமெரிக்க ராக் ஸ்டாரால் தான். அவருடைய பாட்டி இதை அவருக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதற்கு தொடர்ந்து பாபா படத்தில் இதை ரஜினிகாந்த் பயன்படுத்தினார்.
இதையும் படிங்க: யாரும் எம்ஜிஆராக முடியாது!.. விஜய்க்கு எச்சரிக்கை விடும் பிரபல பத்திரிக்கையாளர்!..
ஆனால் அவர் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது தன்னுடைய ஆட்காட்டி விரலை கட்டை விரலில் அழுத்தியது போலவே போஸ் கொடுத்திருப்பார். இதற்கு கணேச முத்திரை என்பது பெயர். இதை பெரும்பாலும் ஞாபக சக்திக்காக பலரும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

Rajinikanth_Keerthy
ரஜினிகாந்தும் தன்னுடன் பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது இதை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதை ஏன் ரஜினி பயன்படுத்துகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். ஒரு வேளை பிரபலங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுவதற்கு இதை பயன்படுத்துக்கிறாரோ?