Connect with us

Cinema History

கே.பாலசந்தர் முன் ரஜினி நடித்த அந்த சீன்.. சிலிர்த்த குருநாதர்.. ஒரே நேரத்தில் கொடுத்த மூன்று படங்கள்…

Rajinikanth: பெங்களூரில்  தன்னுடைய கண்டெக்டர் வேலை போன துக்கத்தில் சென்னை வந்த ரஜினிக்கு பாலசந்தர் அலுவலகத்தில் இருந்து கால் வருகிறது. பலநாட்களாக  துக்கத்தில் இருந்த ரஜினி தன்னை சரி செய்துக்கொண்டு பாலசந்தர் அலுவலத்துக்கு செல்கிறார்.

ரிசப்ஷனில் உட்கார்ந்து இருந்தவருக்கு பாலசந்தர் குரல் ஹாலில் கேட்கிறது. எப்போ கூப்பிடுவார் என இதயம் துடிக்க உட்கார்ந்து இருந்தாராம். அப்போ திடீரென உள்ளே போக சொல்ல அவரை போய் சந்திக்கிறார் ரஜினி. பாலசந்தரை பார்த்து ரஜினி வணக்கம் சொல்ல அவர் நேரடியாக கைகுலுக்கினாராம்.

இதையும் படிங்க: 25 வருஷமாக இதுக்கு தான் உழைச்சேன்… குடும்பமே கதறியது இதுக்கு தான்… நெகட்டிவ் டு பாசிட்டிவ் விஜே அர்ச்சனா…

சேரில் கூட விளிம்பில் உட்கார்ந்து ரஜினிக்கு  அப்போது தமிழ் தெரியாது. ஆங்கிலமும் சரியாக தெரியாது. எந்த மொழியில் பேசுவது என்ற குழப்பம்.  ரஜினி அமைதியாக இருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழிச்சு, என்ன படிச்சிருக்கீங்க?’ என்று பாலசந்தர் கேட்டாராம். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் என்கிறார் ரஜினி.

சில பொதுவான கேள்விகள் கேட்ட பின்னர் பாலச்சந்தர் உங்கள் நடிப்பை நான் பார்த்ததே இல்லை எதுவாது நடித்துக் காட்ட முடியுமா எனக் கேட்கிறார். ரஜினி எனக்கு தமிழ் தெரியாதே என்றாராம். பிரச்சனை இல்லை நீங்க கன்னடத்தில் நடிக்கலாம் என்றாராம் பாலச்சந்தர்.

கிரீஷ்கர்னாட் எழுதிய “துக்ளக்” நாடகத்தில் இருந்து ஒரு சீனை ரஜினிகாந்த் நடித்துக் காட்டியிருக்கிறார். நன்றாக இருக்கிறது என பாராட்டிய கே பாலச்சந்தர் தற்போது அபூர்வ ராகங்கள் என ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் சின்ன ரோல் தான் ஆனால் வலுவான ரோல்.

இதையும் படிங்க: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானா அவர்? ரஜினியை தாழ்த்தி பேசக் காரணம் என்ன?

அதில் உங்களை அறிமுகம் செய்ய இருக்கிறேன். பின்னர் அவள் ஒரு தொடர்கதை படத்தை தெலுங்கில் இயக்க இருக்கிறேன். தமிழில் ஜெய் கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நீங்கள் தெலுங்கில் நடிக்கணும் என்றாராம். தெலுங்கு தெரியுமா என கே பாலச்சந்தர் கேட்க சில வார்த்தைகள் மட்டுமே தெரிந்த ரஜினி உடனே தெரியும் என மண்டையை ஆட்டிவிட்டாராம்.

அடுத்து மூன்று முடிச்சு படத்தில்  உங்களுக்கு வில்லன் கதாபாத்திரம். தமிழ் மட்டும் கற்றுக் கொள்ளுங்கள் உங்களை எங்கேயோ கொண்டு போவேன் என கே. பாலச்சந்தர் சொன்ன வார்த்தையை வெற்றிகரமாக நிறைவேற்றியும் காட்டினார் என்பது ரஜினியின் கேரியரில் முக்கிய புள்ளியாக அமைந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top