ஸ்ரீதேவிக்கும்,ரஜினிக்கும் இருந்த காதல்... கரண்ட் கட்டால் ப்ரேக்-அப் ஆன அவலம்.. என்ன ஆனது தெரியுமா?
தமிழ் சினிமாவில் வெற்றி ஜோடிகள் இருப்பது போல சில களைந்த காதல் ஜோடிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு ஜோடியாக ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் கொடிக்கட்டி பறந்த காலத்தில் காலடி எடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் காலடியினை அழுத்தமாகவே எடுத்து வைத்தவர். அவரை போலவே ஸ்ரீதேவி கதாநாயகியாக திரையுலகில் அடி எடுத்து வைத்தபோது காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா என எண்ணற்ற நாயகிகளுக்கு பெரிய ஆதரவு இருந்தது. அவர்கள் மட்டுமல்லாமல் 80ஸ் நாயகிகளும் வரவும் அதிகரித்திருந்தது. அப்போது தனக்கான இடத்தினை பிடிக்க ஸ்ரீதேவி வெகுவாக போராடினார்.
ஆனால், ஸ்ரீதேவி தன்னுடைய ரகசியங்களை பெரிதாக வெளியில் தெரியாமலே பார்த்து கொள்ளும் தன்மை கொண்டிருந்தார். அப்படி இருந்தவருக்கு அப்போது சினிமாவில் பெரிய இடம் பிடித்திருந்த ரஜினிகாந்துடன் ஜானி படம் நடிக்க வாய்ப்பு வந்தது. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
அந்த நேரத்தில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு நேரத்தில் ஸ்ரீதேவியினை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன். உங்கள் கருத்து என்ன? இயக்குனர் மகேந்திரனிடம் ரஜினிகாந்த் கேட்டு இருக்கிறார். நீங்க இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லா இருக்கும் எனக் கூறி மகிழ்ந்தார் மகேந்திரன். அன்றே ஸ்ரீதேவியின் வீட்டு கிரஹபிரவேசத்துக்கு ரஜினி மற்றும் மகேந்திரன் சென்றனராம்.
ஸ்ரீதேவி அம்மா வந்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாமா? என ரஜினி மகேந்திரனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே கரண்ட் கட்டானதாம். நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை. இது ரஜினியினை மனதில் மாற்றி விட்டது. கரண்ட் போனதை சகுனத் தடையாக அவர் நினைத்துவிட்டதால் ஸ்ரீதேவியுடனான காதலை முறித்து கொண்டாராம் எனக் கூறப்படுகிறது.