“உன்னைய நம்பித்தானே இறங்கினேன்.. இப்படி கவுத்திவிட்டுட்டியே”… கடவுளிடம் சண்டை போட்ட ரஜினிகாந்த்… என்னவா இருக்கும்??

by Arun Prasad |
Rajinikanth
X

Rajinikanth

சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினிகாந்த், ஒரு சிறந்த ஆன்மீகவாதி என்பதை பலரும் அறிவர். மகா அவதார் பாபாஜியின் சிஷ்யனான இவர், அடிக்கடி இமயமலைக்குச் சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.

எளிமைக்கு பெயர் போனவர்

என்னதான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கினாலும், எளிமையில் சிகரமாக விளங்குபவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் இமயமலை பயணங்களில் பயணிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தாலே தெரிந்துவிடும்.

Rajinikanth

Rajinikanth

ஒரு சாதாரண வேஷ்டி சட்டையோடு மக்களோடு மக்களாக அலைவார். மரத்தடியில் படுத்து உறங்குவார். ஜனங்களோடு ஜனங்களாக அமர்ந்து சாப்பிடுவார். இவ்வாறு எந்தவித பகட்டுக்கும் ஆளாகாதவராக திகழ்பவர் ரஜினிகாந்த்.

பாபா

மகா அவதார் பாபாஜியின் மேல் கொண்ட பக்தியினால் உந்தப்பட்டு ரஜினிகாந்த் கடந்த 2002 ஆம் ஆண்டு “பாபா” திரைப்படத்தை தயாரித்தார். மேலும் அத்திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றையும் அமைத்துக்கொடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாபா” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படு தோல்வியடைந்தது.

Baba

Baba

“பாபா” திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து “ரஜினிகாந்த்தின் சகாப்தம் முடிந்தது” என பல பத்திரிக்கைகள் விமர்சித்தன. எனினும் “சந்திரமுகி” திரைப்படத்தின் மூலம் தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டினார் ரஜினிகாந்த்.

ராகவேந்தரா

பாபா திரைப்படத்தின் தோல்வி ரஜினியை அசைத்துவிடவில்லை என்றாலும், மனதளவில் மிகவும் நொந்துப்போனார். அந்த அளவிற்கு மகா அவதார் பாபாஜியின் மேல் பக்தி கொண்டவராக ரஜினிகாந்த் திகழ்ந்தார். ஆனால் இது போன்ற ஒரு சம்பவம் ரஜினிக்கு நடப்பது முதல்முறை அல்ல. கடந்த 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் 100 ஆவது திரைப்படமாக வெளிவந்த ராகவேந்திரா திரைப்படத்திலும் இது போன்ற சம்பவம்தான் நடந்தது.

Raghavendrar

Raghavendrar

கனவுத் திரைப்படம்

ரஜினிகாந்த் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ராகவேந்திரரின் தீவிர பக்தராக திகழ்ந்தார். ஆதலால் தனது 100 ஆவது திரைப்படத்தில் ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என விரும்பினார்.

கே.பாலச்சந்தர்

“ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படத்தை பாலச்சந்தர் தயாரிக்க முழுமனதுடன் ஒப்புக்கொண்டார். இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது ஒரு கவர்ச்சி நடனத்தை இத்திரைப்படத்தில் வைக்க முடிவெடுத்தாராம் ரஜினி. அப்படி ஒரு பாடல் வைத்தால் பொருளாதார ரீதியாக இத்திரைப்படம் வெற்றிபெற வழிவகுக்கும் என நினைத்தாராம்.

இதையும் படிங்க: “இவனை வச்சி படம் எடுத்தா நஷ்டம்தான்”… சொந்த தந்தையாலேயே ஓரங்கட்டப்பட்ட முரளி… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

K Balachander

K Balachander

ஆனால் கே.பாலச்சந்தர், “எனக்கு பணம் முக்கியம் இல்லை. படம்தான் முக்கியம்” என கூறிவிட்டபடியால் அப்பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாம். இதனை தொடர்ந்து “ஸ்ரீ ராகவேந்திரர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

படுதோல்வி

“ஸ்ரீராகவேந்திரர்” திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெறும் என எதிர்பார்த்தார் ரஜினிகாந்த். ஆனால் அத்திரைப்படம் அவரது கேரியரிலேயே மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது. இதனால் கோபம் கொண்ட ரஜினி, நேராக ராகவேந்திரரின் மடத்திற்குச் சென்று “உங்களை பற்றி இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்றுதானே நான் இந்த படத்தை எடுத்தேன். ஆனால் நீங்கள் இத்திரைப்படத்தை ஓடவைக்கவில்லையே” என ராகவேந்திரரின் சிலையை பார்த்து கேட்டாராம்.

Raghavendrar

Raghavendrar

அந்த அளவுக்கு மன அளவில் மிகவும் நொந்துபோயிருந்தார் ரஜினி. ஆனால் இன்று வரை ரஜினியின் விருப்பப்பட்டியலில் இருக்கும் முதல் திரைப்படம் “ஸ்ரீ ராகவேந்திரர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story