அண்ணாமலை படத்தினை என்னால் இயக்க முடியாது... கடைசி நேரத்தில் விலகிய முக்கிய இயக்குனர்.. கசிந்த தகவல்
ரஜினியின் மாஸ் ஹிட்டான அண்ணாமலை திரைப்படத்தினை முதலில் இருக்க இருந்த டைரக்டர் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அண்ணாமலை. ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பூ உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். படம் மாஸ் ஹிட் அடித்தது. கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் முதலில் இயக்குனராக ஒப்பந்தமானவர் இயக்குனர் வசந்த் தானாம். பாலசந்தரின் சிஷ்யன் என்ற முறையில் அந்த வாய்ப்பை அவருக்கு கே.பியே வழங்கினாராம்.
படத்திற்கான வேலைகள் துவங்க இருந்த நிலையில், வசந்த் திடீரென தான் இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். தனிப்பட்ட காரணம் எனக் கூறப்பட்டாலும், அவருக்கு ரஜினியுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகளே இந்த வெளியேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை இந்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் பாலசந்தர்.
இந்த பிரச்சனைக்கு பிறகு இயக்குனராக வந்த சுரேஷ் கிருஷ்ணா படத்தில் ரஜினிக்கென சில மாற்றங்களை செய்து திரைக்கதையை மாற்றி படமாக்கினார். படம் ரிலீஸாகி வசூலில் சக்கை போடு போட்டது. படத்தில் ரஜினியின் நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதை முதல் இசை வரை பெரிய வரவேற்பை பெற்றது.