டிமான்ட்டி காலனி பற்றி ரஜினி சொன்ன வார்த்தை!. எதிர்பார்க்கவே இல்ல! நெகிழும் அருள்நிதி!.
Demonte colony2: கலைஞரின் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த சிலரில் அருள்நிதியும் ஒருவர். ஸ்டாலின் மகன் உதயநிதியும், அழகிரி மகன் தயாநிதியும் சினிமா தயாரிப்பில் இறங்க அருள்நிதி மட்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். பலரிடம் கதை கேட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான வம்சம் என்கிற படத்தில் அறிமுகமானார்.
அதன்பின், சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த மௌன குரு படம் அருள்நிதிக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் அவர் நிரூபித்து காட்டினார். திரைத்துறையிலேயே பலரின் பாராட்டை இப்படம் பெற்றது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்கள்: ‘கோட்’ படத்துல இருக்கிற பெரிய மைனஸ் இதுதான்! ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?
அதில் ஒன்றுதான் டிமான்ட்டி காலனி. 2015ம் வருடம் வெளியான இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். இது அவரின் முதல் திரைப்படமாகும். பேய் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. அதன்பின் நிறைய மிஸ்ட்ரி திரில்லர் படங்களில் நடிக்க துவங்கினார் அருள்நிதி.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13, டி பிளாக், தேஜாவு, டைரி என அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அருள்நிதியோடு இணைந்து பிரியா பவானி சங்கரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. முதலில் 250 தியேட்டரில் இந்த படம் வெளியானது. அதன்பின், 100 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. அதற்கு காரணம் டிமான்ட்டி காலணி முதல் பாகத்தின் ரசிகர்கள் எல்லோருமே இப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அருள்நிதி ‘என்னுடைய திருமண பத்திரிக்கையை கொடுப்பதாக ரஜினி சார் வீட்டுக்கு அப்பாவுடன் சென்றிருந்தேன். அப்போது ‘மௌன குரு’ செம படம். அந்த படத்தில் அற்புதமா நடிச்சிருந்தீங்க என என்னை பாராட்டினார். அவர் அந்த படத்தை பார்த்து என்னை பாராட்டுவார் என நான் நினைக்கவே இல்லை. அதேபோல், என் திருமணத்திற்கு வந்தபோது ‘டிமான்டி காலனி படத்தை பார்த்தேன். சூப்பர்’ என என்னை பாராட்டிவிட்டு வாழ்த்திவிட்டு போனார்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: கொட்டுக்காளி வசூலை அள்ளியதா? படத்தின் கிளைமாக்ஸால் பின்னடைவா?