மாநாடு படத்தை பார்த்த ரஜினி… என்ன சொன்னார் தெரியுமா?….

Published on: November 27, 2021
---Advertisement---

சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த மாநாடு திரைப்படம் ஒருவழியாக நேற்று காலை வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.

இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் கூறி வருகின்றனர். குறிப்பாக சிம்புவுக்கு இது நல்ல ஒரு கம்பேக் திரைப்படம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

maanaadu

ஒருபக்கம் முதல் பாதி சரியில்லை. டைம் லூப் கான்செப்ட் பலருக்கும் புரியவில்லை. முதல் பாதியில் ஏற்கனவே வந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டது. ஆனாலும், படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் 6.37 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

venkat

இந்நிலையில், இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சிம்புவையும், வெங்கட்பிரபுவையும் பாராட்டியுள்ளார். இந்த தகவலை வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படம் சிறப்பாக இருப்பதாகவும், டைம் லூப் கான்செப்ட் புதிதாக இருந்ததாகவும், திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா கலக்கிவிட்டார் எனவும், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் வெங்கட்பிரபுவிடம் கூறியதாக தெரிகிறது.

ரஜினிகாந்தின் பாராட்டும், வாழ்த்தும் படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment