“இப்போதும் ரஜினி வாங்கும் சம்பளம் ஒரு ரூபாய் தான்”… அடேங்கப்பா!! இது நம்ம லிஸ்டலயே இல்லையே…
இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த்தின் பெருந்தன்மையும் தனித்தன்மையும் எளிமையும் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு ரஜினிகாந்த் குறித்து இதுவரை யாரும் அறியாத ஒரு தகவலை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
பி.வாசு
பி.வாசு தொடக்கத்தில் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து சக உதவி இயக்குனரான சந்தான பாரதியுடன் இணைந்து “பன்னீர் புஷ்பங்கள்”, “மதுமலர்”, “மெல்ல பேசுங்கள்”, “நீதியின் நிழல்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.
அதனை தொடர்ந்து இருவரும் தனித்தனியே திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அவ்வாறு பி.வாசு தனியே இயக்கிய முதல் திரைப்படம் “கதாநாயகா”. இத்திரைப்படம் கன்னடத்தில் வெளியான திரைப்படமாகும்.
வெற்றி இயக்குனர்
“கதாநாயகா” திரைப்படத்தை தொடர்ந்து கன்னடத்தில் “குரி”, “ஜெயசிம்ஹா”, “ஜீவன ஜோதி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இத்திரைப்படங்களை தொடர்ந்து மலையாளத்தில் “சமரப்பணம்” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இத்திரைப்படங்களை தொடர்ந்து தமிழில் பிரபுவை வைத்து “என் தங்கச்சி படிச்சவ” என்ற திரைப்படத்தை இயக்கினார். பி.வாசு தனியாக இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் வரிசையாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் வாசு.
ரஜினி-வாசு கூட்டணி
பி.வாசு, ரஜினிகாந்தை வைத்து “பணக்காரன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து “மன்னன்”, “உழைப்பாளி”, “சந்திரமுகி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்கினார். இதில் குறிப்பாக “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி புதிய சாதனையை படைத்தது.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் ரஜினி
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பி.வாசு, ரஜினிகாந்த்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டார்.
“ரஜினிகாந்த் சந்திரமுகியில் நடித்தபோது அட்வான்ஸாக ஒரு ரூபாய்தான் வாங்கினார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் வரையில் பணமே கேட்கவில்லை அதன் பிறகுதான் அவர் முழு சம்பளமும் வாங்கினார்” என பி.வாசு அப்பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: போற இடமெல்லாம் வாய்விட்டா இதான் கதி… தனக்கு தானே வேட்டு வைத்துக்கொண்ட உதயநிதி…
ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகருக்கு சம்பளத்தில் பாதியை அட்வான்ஸாக தருவது வழக்கம். அந்த அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி எகிறும். இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவதும் உண்டு. இதனை தவிர்க்கும் விதமாக ரஜினிகாந்த் இப்போது வரை ஒரு ரூபாய்தான் அட்வான்ஸ் வாங்குகிறாராம்.
அதே போல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் ஒரு ரூபாய்தான் அட்வான்ஸாக வாங்குவார் என பி.வாசு அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.