ஆசையாக கேட்ட மனைவி!.. தயாரிப்பாளரை மடக்கி வாங்கிய ரஜினி!.. தலைவர் பலே கில்லாடி!..

by Akhilan |   ( Updated:2024-03-07 08:15:42  )
ஆசையாக கேட்ட மனைவி!.. தயாரிப்பாளரை மடக்கி வாங்கிய ரஜினி!.. தலைவர் பலே கில்லாடி!..
X

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தனக்கு தேவையானதை தடாலடியாக கேட்டு வாங்குவதில் அசாத்தியமானவர். எங்குமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசும் குணம் கொண்டவர் என்பதை பல இடங்களில் நிரூபித்து இருக்கிறார். அதுகுறித்து ஆச்சரியமான ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சங்கர் குரு திரைப்படத்தில் ஒரு பரிசுப்போட்டி நடந்தது. அதில் கலந்துக்கொண்ட நேயர்களுக்கு டிவி, டேப் ரெக்காடர் உள்ளிட்ட பரிசுகளை ரஜினிகாந்த் தான் கொடுப்பதாக இருந்தது. அதுப்போல தான் அந்த விழாவில் கலந்துக்கொண்டு ரஜினிகாந்த் கடகடவென எல்லாருக்கும் டிவி உள்ளிட்ட பரிசுகளை கொடுத்தார்.

இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்

முடித்துவிட்டு அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி 'எல்லாருக்கும் கொடுத்தேன். எனக்கு ஒரு டிவி கொடுக்கலையா?' என விளையாட்டாக கேட்டாராம். ஆனால் இதை சீரியஸாக கேட்டுக்கொண்டு இருந்த ஏவிஎம் சரவணன் அடுத்த நாளே ஒரு கலர் டிவியை ரஜினி வீட்டுக்கு அனுப்பினாராம். அதை பார்த்த லதா ரஜினிகாந்த், நேராக சரவணனுக்கு கால் செய்து 'என்ன சார் விளையாட்டுக்கு கேட்டா இப்படியா?' என்கிறார்.

ஆனால் அருகில் இருந்த ரஜினிகாந்த் போனை வாங்கி 'நான் விளையாட்டாக கேட்கலை சார். நிஜமா தான் கேட்டேன். என் மனைவி இரண்டாவது ஒரு டிவி கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நான் சமாளித்து கொண்டு இருந்தேன். ஆனால் பிள்ளைகளும் கேட்க தொடங்கிவிட்டனர். சங்கர் குரு படத்தின் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்த போது தான் என் மனைவியிடம் டிவி உள்ளிட்ட பரிசை கொடுக்க என்னை அழைத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

எனக்கு ஒரு டிவி கொடுக்காமலா இருப்பார்கள் எனக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் சரி போயிட்டு வாங்க என அனுப்பி விட்டீங்க. அதான் விளையாட்டா நானே கேட்டு விட்டேன். அனுப்புவீங்கனு தெரியும். ஆனா இவ்வளோ சீக்கரமா கொடுப்பீங்கனு தெரியாது' என சிரித்துக்கொண்டே சொன்னாராம். ரஜினி இதை சில மேடைகளில் சொல்லியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story