“ஐஸ்வர்யா ராய்தான் வேணும்”… ஒற்றைக்காலில் நின்ற ரஜினிகாந்துக்கு டிமிக்கி கொடுத்த தயாரிப்பாளர்…
ரஜினிகாந்த் தற்போது நெ ல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இதில் ரஜினிகாந்த்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.
“ஜெயிலர்” திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் அன்று “ஜெயிலர்” படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் வழக்கம்போல் தனது ஸ்டைலில் மிரட்டலாக தென்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் தீயாக வைரல் ஆனது.
ரஜினிகாந்த் இதற்கு முன் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால், ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிடிவாதமாக நின்ற விஷயத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ரஜினிகாந்த் இளவயது கதாநாயகியை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டாம் எனவும் 40 வயதுமிக்க நடிகையை ஜோடியாக நடிக்க வையுங்கள் எனவும் கூறினாராம். யாரை நடிகையாக தேர்ந்தெடுக்கலாம் என நெல்சன் யோசித்தபோது “ஐஸ்வர்யா ராயை ஜோடியாக போடுங்க” என கூறினாராம் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் பார்த்திபன்!… கண் முழிக்கும்போதெல்லாம் கை கொடுத்த மூத்த நடிகர்…
இதனை தொடர்ந்து நெல்சன், தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த தகவலை தெரிவித்தபோது அவர்கள் “ஐஸ்வர்யா ராய் என்றால் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பார். ஒரு 50 லட்சத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் நடிகையை தேர்ந்தெடுங்கள், போதும்” என கூறினார்களாம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தாராம் ரஜினிகாந்த்.