“நீங்கதானே என்னைய கலாய்ச்சது??”… ரஜினியிடம் வசமாக சிக்கிய லவ் டூடே இயக்குனர்… மாட்டிக்கிட்டீங்களே ப்ரோ!!

by Arun Prasad |
Love Today
X

Love Today

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டூடே” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் மிக முக்கியமான வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 70 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

Love Today

Love Today

பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய “கோமாளி” திரைப்படமும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. “கோமாளி” திரைப்படத்தின் டிரைலரில், 16 வருஷத்திற்குப் பிறகு கோமாவில் இருந்து எழுந்திருக்கும் ஜெயம் ரவி, “இது எந்த வருடம்?” என கேட்பார். அதற்கு யோகி பாபு 2016 ஆம் ஆண்டு என்று கூறிவிட்டு அங்கிருக்கும் தொலைக்காட்சியை ஓடவிடுவார். அதில் ரஜினிகாந்த் “ நான் அரசியலுக்கு வருவது உறுதி” என பேசிக்கொண்டிருப்பார். அதனை பார்க்கும் ஜெயம் ரவி, “யார ஏமாத்த பாக்குறீங்க? இது 1996 ஆம் வருடம்” என கூறுவார்.

Comali

Comali

“கோமாளி” டிரைலரில் இடம்பெற்ற இந்த காட்சி ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. “கோமாளி” திரைப்படத்தில் இருந்து இந்த காட்சியை நீக்க வேண்டும் என பல எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காட்சி அத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதையும் படிங்க: அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியது ஏன் தெரியுமா?? இப்படி ஒரு முடிவை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாங்க!!

Rajinikanth and Pradeep Ranganathan

Rajinikanth and Pradeep Ranganathan

இந்த நிலையில் “லவ் டூடே” திரைப்படத்தை பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். அப்போது “போன படத்துல நீங்க என்னைய கலாய்ச்சீங்கள?” என்று கேட்டாராம். இதை கேட்டதும் பிரதீப் ரங்கநாதனுக்கு தர்மசங்கடமாக போய்விட்டதாம். அதன் பின் ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே “Fine Fine, Just fo fun” என கூறினாராம்.

Next Story