வீட்ல இப்பவும் சிவாஜிராவ் தான்!.. ரகசியமா பண்ண வேலையை அம்பலப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

Published on: March 25, 2024
---Advertisement---

சிவாஜி ராவ் என்கிற பெயரை இயக்குநர் பாலசந்தர் ரஜினிகாந்த் என மாற்றியதே ஒரு ஹோலி பண்டிகையின் போதுதான். இன்றைய நாளை ரஜினிகாந்த் டே என்றே அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே பல ஆண்டுகள் தங்கி விட்டாலும் இன்னமும் வீட்டில் சிவாஜி ராவ் கெய்க்வாட்டாகவே ரஜினிகாந்த் வாழ்ந்து வருகிறாரா என்கிற கேள்வியை அவரது ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் எழுப்பி உள்ளன.

இதையும் படிங்க: முதல் படத்திலேயே நீச்சல் உடையில் அசத்திய நடிகை!… 80ஸ் இளசுகளைக் கவர்ந்த ஜெயஸ்ரீ!…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது தந்தை ரஜினிகாந்த் மற்றும் மகன்களுடன் கலர் பூசி ஹோலி கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், சிவாஜி ராவை ரஜினிகாந்தாக மாற்றிய கே. பாலசந்தருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் செம ஃபிளாப் ஆனது. அதற்கு காரணமே படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய் விட்டது என்றும் அப்பா ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்ததும் தான் காரணம் எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனோட சும்மா சுத்தல!.. தலைவர் 171 எப்போ ஆரம்பிக்குது தெரியுமா? சரவெடி லோகேஷ்!..

இப்படியொரு சுமாரன படத்தில் நடித்து விட்டு எப்படி இது தேசிய விருது வாங்கும் படம் என பில்டப் பண்ணாரு ரஜினிகாந்த் என ஏகப்பட்ட ட்ரோல்கள் வைரலாகின. மேலும், ஹார்ட் டிஸ்க் காணோம் என்கிற வார்த்தை மீம் மெட்டீரியலாகவே மாறி விட்டது.

தற்போது ரஜினிகாந்தின் ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெளியே தான் ரஜினிகாந்த் வீட்ல சிவாஜிராவ் தான் போல என கலாய்த்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.