More
Categories: Cinema History Cinema News latest news

சூப்பர்ஸ்டார் ஆக்கிய நண்பரை இரண்டு படத்தில் நடிக்க வைத்த ரஜினிகாந்த்… ஹிட் படத்தில் வரது இவர்தானா?

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்து நடிகரானவர். ஆனால் அவரை படிக்க வைத்தது அவர் நண்பர்  ராஜ்பகதூர் தானாம். அதுக்காக அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் இரண்டு படங்களை அவரை நடிக்க வைத்து இருக்காராம்.

பெங்களூரில் கண்டக்டராக வேலை செய்து வந்தவர் ரஜினிகாந்த் அவரின் ஸ்டைலையும் அழகையும் பார்த்து ரசிக்கிறார் நண்பரான ராஜ பகதூர். மேலும், உனக்கு திறமை இருக்கிறது நீ நடிக்க வேண்டும் அதனால் சென்னையில் இருக்கும் திரைப்பட கல்லூரியில் போய் படி  என அறிவுரை சொல்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சின்மயி சொன்ன பொய்யால் பல லட்சங்கள் நஷ்டம்… லியோவில் லோகேஷ் செஞ்சது தப்பு.. சீறி பாயும் பிரபலம்

ஆனால்  செலவுக்கு பயந்த ரஜினிகாந்துக்கு மாதம் 120 ரூபாய் தனது சம்பளத்திலிருந்து ராஜ் பகதூர் அனுப்புவது வழக்கமாகியது இப்படி இருக்க ஒருமுறை அவரை பார்க்க திரைப்பட கல்லூரிக்கு சென்ற ராஜ் பகதூர் தன் கழுத்தில் இருந்த செயின் கழட்டி நண்பர்களிடத்தில் போட்டு இருக்கிறார். இதை வைத்துக் கொள் உனக்கு உபயோகமாக இருக்கும் என்றாராம். 

 அண்ணன் சத்யநாராயண ராப் அனுப்பிய பணமும் ராஜ் பகதூர் அனுப்பும் பணமும் கிட்டத்தட்ட மாதம் இருபதாம் தேதிக்குள் தீர்ந்துவிட தனது கழுத்தில் இருந்த செயினை 200 ரூபாய்க்கு மார்வாடி கடையில் அடகு வைத்து அதை மிச்சம் உள்ள நாட்களில் செலவுக்கு வைத்துக் கொள்வது ரஜினி வழக்கமாகியது.

இதையும் படிங்க: தங்கலான் கதை உருவானதன் சுவாரஸ்ய பின்னணி.. இந்த படத்தோடு மோதும் மற்றுமொரு பிரம்மாண்டம்!..

அபூர்வராகங்கள் மூன்று முடிச்சு படங்களில் அந்த செயினுடன் நடித்திருக்கும் ரஜினிகாந்த் மூன்று முடிச்சு படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் அந்த செயினை தவற விட்டுவிட்டாராம்.  கிட்டத்தட்ட ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டியபோது ராஜ் பகதூரை தன்னுடனே அழைத்துக் கொள்ள நினைத்து  அவரிடம் கேட்டபோது என்னைப் பற்றி உனக்கு தெரியும். 

நான் அங்கே உன்னைப் பார்க்க வந்து நீ பிஸியாக இருந்தால் உன்னை தொல்லை செய்யவே எனக்கு பிடிக்காது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது. அதில் என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. உனக்கு என்னை பார்க்க தோன்றினால் ஒரே கால் செய் உடனே வருகிறேன் என்றாராம். தன்னை வாழ வைத்த அந்த ராஜ்பகதூரை ரஜினி என்றும் பெருமையாகவே நினைக்கும்படி செய்துவிடுவது அவர் வழக்கமாகியது. 

இப்படி பல உதவிகள் செய்த ராஜை எப்படியாவது ஒரு சீனிலாவது நடிக்க வைக்க வேண்டும் என்பது ரஜினியும் விருப்பம் ஆக்கியது அதற்காக அவர் தயாரித்த வள்ளி திரைப்படத்தில் பால்காரி பல்லவியின் ராணுவ கணவராக நடித்தார். அடுத்து, படையப்பா படத்தில் கிக்கு ஏறுதே பாடலுக்கு முன்னர் வரும் அரசியல்வாதியும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கலைஞரை எதிர்த்து சேரன் எடுத்த படம்! என்ன செய்தார் தெரியுமா கலைஞர்? ஒரு வருசத்திற்கு பொழப்பே போச்சு

Published by
Akhilan

Recent Posts