ரஜினிகாந்தின் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இவ்வளோவா? கலக்குங்க!...
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பெரிய இயக்குனராக உருவெடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்தை இயக்கும் படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெலியாகி இருக்கிறது.
மாநகரம் படத்தினை இயக்கி கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்றாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, கார்த்தியை வைத்து கைதி படத்தினை இயக்கினார். பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இதையும் படிங்க: கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..
இதனால் விஜயை வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜயின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாகவே அமைந்தது. 2021ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் முக்கிய இடம் பிடித்தது. இதையடுத்து, லோகேஷின் ஃபேவரிட் ஹீரோவான கமலை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார்.
கமல்ஹாசனின் கேரியரில் வேறுவிதமான ஹிட் படமாக அமைந்தது. அப்படத்தில் சில காட்சிகளை கைதி படத்துடன் லாக் செய்ய எல்சியூ என்ற சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார். இது கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதே டெக்னிக்கை தன்னுடைய லியோ படத்திலும் பயன்படுத்தினார்.
இதையும் படிங்க: ‘விடாமுயற்சிக்கு’க்கு விட்டாச்சு லீவு..! இனி ‘தல’ய பிடிக்க முடியாது.. தல முழுக வேண்டியதுதான்
தொடர்ச்சியாக கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை இயக்கி வரும் லோகேஷ் தற்போது ரஜினிகாந்தின் ’கூலி’ படத்தினை இயக்கி வருகிறார். வேறு விதமான நெகட்டிவ் ஷேடில் ரஜினி நடித்து வருகிறார். படம் வேறு மாதிரியாக அமையும் எனவும் கிசுகிசுக்கள் எழுந்ததுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். கூலி படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் பெரிய தொகையாகவே கொடுக்கப்படும். அப்படி இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக லோகேஷ் மாறுவார் எனக் கூறப்படுகிறது.