அரங்கம் அதிரட்டுமே!.. 100 நாள் கூலி.. அய்யோ அந்த வேலை இல்லைங்க.. தெறிக்கும் அனிருத் மியூசிக்!..

#image_title
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, செளபின் சாஹிர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கூலி வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் இப்போதே ரசிகர்களை அந்த படத்தை பற்றி பேசவும் ஹைப் ஆகவும் புரமோஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது.
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜிகிடு ஜிகிடு வைப் பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் வைரலான நிலையில், அடுத்த பாடலின் சின்ன க்ளிம்ப்ஸை அனிருத் இசையில் தரமான சம்பவமாக சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
கூலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருக்கும் போது மாநகரம் ஸ்ரீயின் உடல்நிலை குறித்தெல்லாம் கிளம்பிய சர்ச்சைகள் லோகேஷ் கனகராஜை டிஸ்டர்ப் செய்த நிலையில், அவர் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து தன்னை தொல்லை பண்ணாதீங்க என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிஅலியில், இன்னும் 100 நாட்களில் கூலி படம் ரசிகர்களின் பார்வைக்கு வரப்போகிறது என்கிற அறிவிப்புடன் அனிருத்தின் அடுத்த பாடலான “அரங்கம் அதிரட்டுமே” பாடல் க்ளிம்ஸ் உடன் செளபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனாவின் பேக் ஷாட்டுகளுடன் கடைசியாக ரஜினிகாந்தை பின்னாடியிருந்து முன்னாடி காட்டி தெறிக்கவிட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர். 100 நாள் வேலை போல 100 நாளில் கூலி படமா என நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணவும் ஆரம்பித்துள்ளனர்.