நடிகரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ரஜினிகாந்த்!.. இதெல்லாம் தெரியாம போச்சே!...

by சிவா |
rajinikanth
X

பல வருடங்களாகவே இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டராக, தலைவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஷாருக்கான், சல்மான் கான் கூட இவரை ‘தலைவர்’ என அழைக்கும் அளவுக்கு உச்சம் தொட்ட நடிகர் இவர். வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினி அமிதாப்பச்சனிடம் பேசியபோது ‘உங்களுடன் நடிப்பது எனக்கு பெருமை’ என சொல்லி நடிக்க முன்வந்திருக்கிறார்.

இந்திய சினிமா உலகில் 40 வருடங்களாக ரஜினி ஏற்படுத்திய பாதிப்பே அதற்கு காரணம். தனது திரைவாழ்வில் மிகவும் குறைவான தோல்விகளை பார்த்தவர் ரஜினிதான். பாபா படம் தோல்வி அடைந்தபோது ‘ரஜினி இனிமேல் அவ்வளவுதான்’ என பேசினார்கள். ஆனால், 4 வருடம் இடைவெளி விட்டு சந்திரமுகி என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்து அப்படி பேசியவர்களின் வாயை அடைத்தார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ரஜினி படம்!.. ஓஹோன்னு வாழ்க்கை!.. நெல்சன் இனிமே வெறும் டைரக்டர் மட்டுமில்லை.. அதுக்கும் மேல!

ரஜினி நல்ல நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு நல்ல ரசிகரும் கூட. ஒரு நல்ல ரசிகனால் மட்டுமே ஒரு நல்ல நடிகராக முடியும் என சிவாஜி சொல்வார். இவரும் அப்படித்தான். யாரையும் பாராட்ட தயங்கவே மாட்டார். மஞ்சுமெல் பாய்ஸ் ஓடினாலும் அந்த டீமை நேரில் அழைத்து பாராட்டி அவர்களை உற்சாகபடுத்துவார்.

தொடர்ந்து வெளியாகும் நல்ல திரைப்படங்களில் பார்க்கும் பழக்கமுடையவர் ரஜினி. அவருக்கு அந்த படம் பிடித்திருந்தால் உடனே அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என எல்லோருக்கும் போன் செய்து பாராட்டுவார். கமலை போட்டி நடிகராக பார்க்கவே மாட்டார். கமலின் பல படங்களை பார்த்து அவரின் வீட்டிற்கு சென்று பாராட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க: நோ.. நெவர்!.. செத்தாலும் அது மட்டும் நடக்கக் கூடாது!.. கறாராக இருந்து சாதித்து காட்டிய ரஜினி!..

கமலின் ஹேராம் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்ததாக ஒரு மேடையில் சொன்னவர்தான் ரஜினி. இந்நிலையில், ரஜினியின் உறவினரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நான் ஷாமா ராகம் என்கிற ஒரு மலையாள படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தை பார்த்து ரஜினி அழுதுவிட்டார்.

yg mahindra

அந்த படம் எடுக்கப்பட்டு 4 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் வெளியாகவில்லை. ரஜினி ஒரு நல்ல ரசிகர். நாங்கள் நாடகங்கள் போடும்போதே அடிக்கடி வருவார். அதேபோல் அவருக்கு ஒரு காட்சி பிடித்தால் எழுந்து நின்று கைத்தட்டி ரசிப்பார். சிவாஜிக்கு பின் அப்படி காட்சியை ரசிப்பவர் அவர்தான்’ என ஒய்.ஜி.மகேந்திரன் சொல்லி இருந்தார்.

Next Story