நிறைமாத கர்ப்பிணியாக திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் மகள்!

திருப்பதியில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா சுவாமி தரிசனம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும், சில படங்களுக்கு பாடல்களையும் பாடியிருக்கிறார். இவர் பிரபல நடிகர் தனுஷின் மனைவி என்பது ஊரறிந்த விஷயம் தான்.

அதே போல் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ஒரு கிராபிக் டிசைனர். இவர் படையப்பா, பாபா, சந்திரமுகி என தனது அப்பாவின் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்தது முதல் சிறுவயதில் இருந்து கிராபிக்ஸ் மீது ஆர்வம் கொண்டார். இதற்கிடையில் அப்பா ரஜினியின் கோச்சடையான் படத்தையும் இயக்கியிருந்தார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு அஷ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வேத் கிருஷ்ணா என்ற மகனை பெற்றெடுத்தார். அதன் பின்னர் அஷ்வினுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். பின்னர் கடந்த 2019ல் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கும் சௌந்தர்யா திருப்பதி கோவிலுக்கு கணவன் , மகன் மற்றும் அக்கா சௌந்தர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it