சொன்னதை செய்த சூப்பர் ஸ்டார்.. பிதாமகன் தயாரிப்பாளருக்கு செய்த மாபெரும் உதவி…
“பிதாமகன்”, “கஜேந்திரா”, “லூட்டி” போன்ற திரைப்படங்களை தயாரித்த வி.ஏ.துரை, சமீப காலமாக நீரிழிவு நோயால் நடக்க கூட முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு ஒரு யூட்யூப் சேன்னல் வி.ஏ.துரையை சென்று சந்தித்து அவரிடம் பேட்டி எடுத்தது.
அதில் வி.ஏ.துரை, தான் சக்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் தனது குடும்பம் தன்னை கைவிட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து தற்போது மருந்து செலவுக்கு கூட காசு இல்லாமல் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது. இவ்வாறு சக்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் வி.ஏ.துரையை சினிமாத் துறையை சேர்ந்த ஓரிருவர் அவருடன் இருந்து அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
வி.ஏ.துரை இயக்கிய “பிதாமகன்” திரைப்படத்தில் நடித்த சூர்யா, 2.50 லட்ச ரூபாய் உதவி செய்திருக்கிறாராம். அதே போல் வி.ஏ.துரையின் உடல் நலத்தை குறித்து கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ், 5 லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சொன்னதை செய்த ரஜினிகாந்த்
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் விடியல் ராஜ் என்பவர், வி.ஏ.துரையின் உடல் நிலையை குறித்து ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேள்விபட்ட ரஜினி மிகவும் வருந்தினாராம். அதன் பின் அவர் வி.ஏ.துரைக்கு தொடர்புகொண்டு அவரின் மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார் என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் ரஜினிகாந்த், வி.ஏ.துரையின் சிகிச்சைக்காக பத்து லட்ச ரூபாய் செலவு செய்ய முடிவெடுத்துள்ளாராம். எப்போதெல்லாம் மருத்துவமனையில் துரைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மருத்துவமனை பில்-ஐ தான் செட்டில் செய்துவிடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த். இதன் முதல்கட்டமாக வி.ஏ.துரையின் சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் பில் கட்டியிருக்கிறாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் தயாரித்து நடித்த “பாபா” திரைப்படத்தில் வி.ஏ.துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசனை பிழிந்தெடுத்த கோவை சரளா!… ஒரு லெஜண்டுன்னு கூட பார்க்காம இப்படியா?