அப்பா எட்டு அடினா பொண்ணு பதினாறு அடி போல… வேறு வழியில லாபம் பார்த்த நம்ம ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மகள் ஆவார். இவர் நடிகர் தனுஷின் மனைவியும் கூட. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் வலம் வருகிறார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பின் வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார்.
இதையும் வாசிங்க: என் படத்தை எனக்கே போட்டு காட்டினாலும் நீதான்டா அடுத்த ஆடு! ‘ஜவான்’ வெற்றி கமலை எப்படியெல்லாம் மாத்திடுச்சு?
தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படம்தான் லால் சலாம். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார்.மேலும் இப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கவிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு ரஜினி சம்பளம் வேண்டாம் என ஆரம்பத்தில் கூறியுள்ளார். அதற்கு பதிலாக இப்படத்தின் லாப தொகையில் இருந்து தனக்கென 40 சதவீத தொகையை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு லைக்கா நிறுவனமும் சம்மதம் கூறியுள்ளனர்.
இதையும் வாசிங்க: ரஜினி இமேஜை காலி பண்ண போகும் லால் சலாம்!.. மகளுக்காக மாட்டிக்கொண்டு முழிக்கும் தலைவர்!..
ஆனால் தற்போது இப்படத்தின் லாபத்தில் எனக்கு பணம் வேண்டாம் எனவும் மேலும் தனது சம்பளமான 40கோடியையே தரும்படி கேட்டுள்ளாராம். சில நேரம் கேமியோ ரோலில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளமா என நெட்டிசன்கள் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
ஆனால் அப்பாவோ இப்படி கணக்கு போட்டால் மகள் அவருக்கும் மேல். இப்படத்தின் பட்ஜெட் தொகை 25 கோடி. ஆனால் ஐஸ்வர்யா இப்படத்தின் பட்ஜெட்டினை 50 கோடி அளவிற்கு இழுத்து விட்டாராம். இந்த பட்ஜெட்டிலேயே ஐஸ்வர்யா தனது அப்பா எதிர்பார்த்த லாபத்தை பெற்றிருப்பார் என வலைதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ நம்ம தலைவர் படம்னா கெத்துதான்.
இதையும் வாசிங்க: தற்கொலை பண்ணிக்க நினைச்ச ரஜினிகாந்த்… நண்பர் சொன்ன கதையால் சூப்பர்ஸ்டாராக மாறிய ஆச்சரியம்!