சிவகார்த்திகேயனை ஒதுக்கிய ரஜினி… “இது என்னோட படம்”… ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த ஷாக்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
நெல்சன் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. எனினும் நெல்சன் “ஜெயிலர்” திரைப்படத்தை சிறப்பாக உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு முன்பு நெல்சன், சிவகார்த்திகேயனை வைத்து “டாக்டர்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் டார்க் காமெடி வகையராவைச் சேர்ந்தது. மேலும் இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.
சிவகார்த்திகேயனும் நெல்சனும் பல காலமாகவே நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு காட்சியில் நடிக்கவைக்க நெல்சன் ரஜினியிடம் கேட்டாராம்.
ஆனால் அதற்கு ரஜினிகாந்த் மறுத்திருக்கிறார். மேலும் “ஜெயிலர் என்னுடைய திரைப்படமாகவே இருக்கட்டும்” எனவும் கூறினாராம். இத்தகவலை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இச்செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.