குறிச்சி வைச்சிக்கோங்க அந்த ரஜினி படம் பந்தயம் அடிக்கும்… மெகா ஹிட் சினிமா பிரபலம் நம்பிக்கை.!

Published on: July 25, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டிவிட்டு தனக்கும் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்தார். அதற்காக ஒரு சூப்பரான கதையை எழுதி அதையும் ரஜினியிடம் அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, ரஜினியின் 169-வது படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்குவார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவாரா இல்லையா என்கிற கேள்விகள் எழும்பியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் இணையவுள்ள படம் குறித்தும்,  தேசிங்கு பெரியசாமி குறித்தும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ”  தேசிங்கு பெரியசாமி ஒரு சிறந்த இயக்குனர், மிக அற்புதமான ஒரு இயக்குனர். எழுதி வச்சுக்கோங்க, குறிச்சு வச்சுக்கோங்க. அவர் தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வருவார். அவரது காலம் தமிழ் சினிமாவின் பொற்காலமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது படைப்பாற்றல் பிரம்மாண்டமாக இருக்கும்.

இதையும் படியுங்களேன்- லண்டனில் இருந்து திருப்பிய அஜித்… நேராக சென்ற இடம் இதுதான்.! சீக்ரெட் தகவல்…

ரஜினிக்காக அவர் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறார். அந்த படம் நடந்தால், அது நிச்சயம் பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வாக இருக்கும் என நிச்சயமாக சொல்வேன். நிச்சயம் அந்த படம் நடக்கும் என நம்புகிறேன். நடந்தால் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும்”என உறுதியாக கலைப்புலி எஸ்.தாணு. தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி – தேசிங்கு பெரியசாமி – கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் ஒரு படம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.