
Cinema News
யாருக்கும் செய்யாததை ரஜினி எங்களுக்காக செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பிரித்திவிராஜ்!..
Empuraan: மலையாள திரையுலகில் முக்கியமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உண்டு. பல மலையாள படங்களில் நடித்த பிரித்திவிராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, ராவணன், காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டு. 2019ம் வருடம் வெளிவந்த லூசிபர் திரைப்படம் மூலம் பிரித்திவிராஜ் இயக்குனராகவும் மாறினார். அரசியல் திரில்லராக வெளிவந்த இந்த படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார் பிரித்திவிராஜ்.
லூசிபர் படத்தில் மோகன்லால் வேடம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கான மாஸ் மற்றும் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரித்திவிராஜும் நடித்திருந்தார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழகத்திலும் நன்றாக ஓடியது.

#image_title
எனவே, இதை கதையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்நிலையில்தான், இந்த படத்தின் 2ம் பாகம் போல எம்புரான் படம் உருவாகியிருக்கிறது. லூசிபர் படம் போலவே இந்த படமும் பக்கா அரசியல் திரில்லராக உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகி 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் வீடியோவை ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கட்த்தில் வெளியிட்டார். மேலும், எம்புரான் டிரெய்லர் வீடியோவை பார்த்தேன். இது அற்புதமான வேலை.. படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்.. படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பார்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரித்திவிராஜ் ‘ரஜினி சாரை வைத்து ஒரு படமெடுக்கும் வாய்ப்பு வந்தும் என்னால் முடியவில்லை. இப்போது நான் சென்னையில் இருந்தபோது அவரை சந்தித்தேன். டிரெய்லரை பார்த்து மிகவும் பாராட்டினார். பொதுவாக படம் தொடார்பான் பதிவுகளை அவர் பகிர மாட்டார். ஆனால், எங்களுக்காக டிவிட்டரில் பதிவிட்டு வாழ்த்து சொல்லியிருந்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.