மனோஜுக்கு இரங்கலும் சொல்லல.. நேரிலும் வரல!.. ரஜினி செய்வது சரியா?!...

by சிவா |
rajini
X

#image_title

Manoj Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாலை தனது வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த செய்தி சினிமா உலகினரை உலுக்கியிருக்கிறது. ஏனெனில் தள்ளாடும் வயதில் இருக்கும் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு புத்திர சோகத்தை காலம் கொடுத்துவிட்டதே என்கிற கவலையே ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. கடைசி வரை பாரதிராஜாவுக்கு இது பெரிய வலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மனோஜின் மறைவையடுத்து நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, கவுண்டமணி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நீலாங்கரையில் உள்ள மனோஜின் வீட்டிற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், சீமான், பி.வாசு, ஆர்.கே.செல்லவமணி, பேரரசு போன்ற இயக்குனர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நேரில் வரமுடியாத சிலர் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்தார்கள்.

#image_title

கமல்ஹாசன் ஊரில் இல்லை. அவர் ஷூட்டிங் இருந்ததால் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். அதேபோல், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான இளையராஜா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் செல்லவில்லை. எனவே, டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். ஆனால், பாரதிராஜாவுக்கு நெருக்கமாக இருந்த நடிகர ரஜினி இதுவரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் இல்லை. டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கவும் இல்லை.

இளையராஜா சிம்பொனி அமைத்தபோது அதை பாராட்டி உடனே டிவிட் போட்டவர், மோகன்லாலின் தம்புரான் பட டிரெய்லரை பாராட்டி டிவிட் போட்டவர், பாரதிராஜா மகனுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. 25 வருடங்களுக்கு முன்பு காவிரி நீர் பிரச்சனை வந்தபோது ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் பாரதிராஜா. ஆனால், ரஜினி அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பாரதிராஜாவின் தாய் இறந்த செய்தி கேட்டு பாரதிராஜாவுக்கு முதலில் ஆறுதல் சொன்னவர் ரஜினிதான்.

bharathiraja

#image_title

ஆனால், என்ன காரணமோ.. மனோஜின் இறப்பு விஷயத்தில் மௌனமாக இருக்கிறார். ஒருவேளை ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இருப்பதால் அதை முடித்துவிட்டு நேரில் சென்று பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்வாரா? இல்லை டிவிட்டரில் இரங்கல் தெரிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story