“எனக்கு அதுலாம் வேண்டாம், தயவுசெஞ்சு போயிடுங்க”… தயாரிப்பாளர் செய்த செயலால் கடுப்பான ரஜினி… என்னவா இருக்கும்??

Rajinikanth
ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், எளிமையின் சிகரம் என்பதை பலரும் அறிவார்கள். புகழின் உச்சிக்குச் செல்லும் ஒரு நபர் எளிமையை கடைப்பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையையே அப்படி அமைத்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.

Rajinikanth
ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலை செல்வது வழக்கம். அந்த பயணத்தின் போது வெளிவந்த புகைப்படங்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வியப்பு ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஒரு மரத்தடியில் துண்டை விரித்து படுத்திருப்பார். மக்களோடு மக்களாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். இதை எல்லாம் எவரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. ரஜினிகாந்த் எந்த அளவுக்கு எளிமையானவர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த அளவுக்கு எளிமையானவரா? என ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்த மற்றொரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Sivaji The Boss
கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிவாஜி”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்தபோது தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், ரஜினிகாந்த்துக்கு ஒரு கேரவனை தயார் செய்து கொண்டு வந்திருந்தாராம்.
அதனை பார்த்த ரஜினிகாந்த், “இந்த கேரவன் யாருக்கு?” என கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர் “உங்களுக்குத்தான் சார் ஸ்பெஷலா ரெடி பண்ணிருக்கு” என கூறினாராம். அதற்கு ரஜினிகாந்த் “இங்கேதான் இத்தனை மேக்கப் அறைகள் இருக்கிறதே, எனக்கு எதுக்கு கேரவன். முதல்ல இந்த கேரவனை திருப்பி அனுப்புங்க” என்றாராம்.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் இளையராஜா இசையமைத்த படங்கள்… பின்னாளில் மெகா ஹிட்…

Rajinikanth
இந்த சம்பவம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பேசியபோது “இந்த எளிமையை இப்போதுள்ள நடிகர்கள் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.