நீங்க இங்க இருந்தா ஷூட்டிங்கே நடக்காது… தயாரிப்பாளரை துரத்திவிட்ட ரஜினி பட இயக்குனர்!...

by Akhilan |
நீங்க இங்க இருந்தா ஷூட்டிங்கே நடக்காது… தயாரிப்பாளரை துரத்திவிட்ட ரஜினி பட இயக்குனர்!...
X

Rajinikanth: பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் ரஜினிகாந்த். அப்படி அவர் இருந்ததுக்கு முக்கிய காரணமே தன்னால் முடிந்தாலும் இல்லையென்றாலும் படத்துக்காக அவர்கள் சொல்வதை செய்ய துணிவாராம். அப்படி உயிரை கூட யோசிக்காமல் அவர் செய்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிப்பில் ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த் சென்னைக்கு வந்து திரைப்பட கல்லூரியில் முறையாக சேர்ந்து பயிற்சி எடுத்தார். அவருக்கு இருந்த ஆர்வத்தினை பார்த்த கே.பாலசந்தர் தன்னுடைய படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவெடுத்தார்.

இதையும் படிங்க: அட எனக்கே ஸ்கெட்ச்சா?… விஜய் செட்டை பார்த்து குழம்பிப் போன கே.பாலசந்தர்… ஷாக் தந்த இயக்குனர்…

அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க ஒப்புதல் கிடைத்தாலும் ரஜினிகாந்தை தமிழ் கற்றுக்கொள்ள சொல்கிறார் கே.பாலசந்தர். இதனால் நேராக பெங்களூர் கிளம்பிய ரஜினிகாந்த் நண்பர் ராஜ்பகதூரை சந்தித்து அடுத்த ஒரே மாதத்தில் சரளமாக தமிழ் பேசவும் கற்றுக்கொண்டே ஷூட்டிங்கிற்கு திரும்பினாராம்.

அந்த வகையில் தான் செய்யும் விஷயங்களில் முழு கவனம் செலுத்தும் ரஜினியை கே.பாலசந்தருக்கு பிடித்துவிட்டதாம். அதற்கடுத்த ரஜினிக்காக அவர் இயக்கிய படங்களே சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்து வரை ரஜினியை வளர்த்துவிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிறைய படங்களில் ரஜினியை வைத்து தயாரித்தும் இருக்கிறார்.

இதை தொடர்ந்து முத்துராமன் இயக்கிய புதுக்கவிதை திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அப்படத்தினை தயாரித்தது கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு பாலசந்தர் வருவது வழக்கம். அப்படி ஒருமுறை சண்டைக்காட்சி நடக்கும் போது அங்கு வந்தாராம்.

இதையும் படிங்க: அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..

ரஜினியின் மீது தீப்பந்தங்களை எறிந்து அதில் இருந்து அவர் லாவகமாக தப்பிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம். ஏற்கனவே சண்டைக்காட்சிக்கும் கே.பாலசந்தருக்கும் வெகுதூரம் என்பதால் அவருக்கு இதை பார்த்து பயம் வந்துவிட்டதாம். அய்யோ பார்த்துப்பா அவர் மீது அடிப்படாமல் பார்த்து எச்சரிக்கையா பண்ணுங்க என்றாராம். இதனை தொடர்ந்து முத்துராமன் கடுப்பாகி விட்டாராம்.

முதலில் நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இப்போ நீங்க போனா தான் படப்பிடிப்பையே தொடங்குவேன் என கே.பாலசந்தரை அங்கிருந்து கிளப்பிய பின்னரே முத்துராமன் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினாராம். அதனை தொடர்ந்து இதை போன்ற காட்சிகள் இருந்தால் பாலசந்தரே அந்த பக்கம் வரமாட்டாராம்.

Next Story