மீண்டும் அந்த இயக்குனருடன் ஒரு படம்!.. ரஜினியின் லைன்-அப் லிஸ்ட் இதோ!...

 
Rajinikanth: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாருக்கும் கொடுக்காமல் தானே வைத்திருக்கிறார். ‘இப்போது சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என சிலர் பேசினாலும் ‘ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான்’ என விஜயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி. 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் படங்களால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் பலர். 72 வயது ஆன பின்னரும் இன்னும் திரைப்படங்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார். இதையும் படிங்க: ரஜினியின் வேகமான ஸ்டைல்… வியந்து போன சிவாஜி அவருக்காக செய்த விஷயம்! 80களில் சினிமாவில் நடிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் இன்னமும் அப்படியே இருப்பதுதான் ஆச்சர்யம். கதை பிடித்து ஓகே சொல்லிவிட்டால் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு நடிக்கும் நடிகர் ரஜினி. அதை இப்போதும் பின்பற்றி வருகிறார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ரஜினி அடுத்து யார் யார் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அது தொடர்பான செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது. மீண்டும் அந்த இயக்குனருடன் ஒரு படம்!.. ரஜினியின் லைன்-அப் லிஸ்ட் இதோ!... Jailer2 கூலி படத்தை முடித்தவுடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அது முடிந்ததும், வேட்டையன் பட இயக்குனர் ஞானவேலுடன் ஒரு படத்தில் மீண்டும் இணையவிருக்கிறாராம். வேட்டையன் படம் சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் அவருடன் பணிபுரிவது ரஜினிக்கு பிடித்திருப்பதால் இந்த முடிவு என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், வெங்கட்பிரபு போன்ற சில இயக்குனர்களும் ரஜினியை வைத்து படம் பண்ண முயற்சி செய்து வருகிறார்கள். கூலி படம் முடிந்த பின் ஜெயிலர் 2 படம் தொடர்பான செய்தி வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இதையும் படிங்க: குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…
சிவா
சிவா

5201 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

From Around the web