நான் ஜெயலலிதாவை திட்டியது இதனால்தான்!.. பல வருஷம் கழிச்சி சொல்லிட்டாரே ரஜினி!….

by சிவா |   ( Updated:2025-04-09 03:07:03  )
rajini
X

1996ம் வருடம் பாட்ஷா படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நேரம். அந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசிய ரஜினி ‘தமிழகத்தில் வெடி குண்டு கலாச்சாரம் வந்துவிட்டது.. அரசு என்ன செய்கிறது?’ என கேட்டார். அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், ரஜினி மக்களிடம் பிரபலமான நடிகர், அவருக்கென லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்ததால் ரஜினியை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் ரஜினிக்கு அரசியலுக்கு வரவேண்டும் என மக்களே எதிர்பார்த்தார்கள். அப்போது மட்டும் அவர் கட்சி துவங்கி தேர்தலில் நின்றிருந்தால் கண்டிப்பாக முதலமைச்சராகவே ஆகியிருப்பார். ஆனால், ரஜினி அதை விரும்பவில்லை. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியை வெற்றி பெற வைத்து ஜெயலலிதாவை தோற்கடித்தார்.

அதன்பின் தொடர்ந்து தனது திரைப்படங்களில் அரசியல் பேசி வந்தார். தன்னுடைய படங்களில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தை வைத்து அந்த கதாபாத்திரத்திற்கு அறிவுரை சொல்வது போல மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு அறிவுரை சொன்னார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா உள்ளிட்ட பல படங்களிலும் மறைமுகமாக ஜெயலலிதாவை திட்டி வசனம் பேசியிருப்பார்.

ஒருபக்கம் ‘நான் அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில்’ என்றும் உருட்டினார். 25 வருடங்கள் ரசிகர்களுக்கு ஆசைகாட்டிவிட்டு ஒருவழியாக ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார். அவரின் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் ஆனார்கள். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி என்னால் அரசியலுக்கு வரமுடியாது என சொல்லி எஸ்கேப் ஆனார். அவரை நம்பியிருந்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். இப்போது சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் ரஜினி பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பாட்ஷா பட தயாரிப்பாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாளையொட்டி வீடியோ வெளியிட்டுள்ள ரஜினி ‘பாட்ஷா விழாவில் ஆர்.எம்.வீ மேடையில் இருந்தார். அவரை வைத்துக்கொண்டே வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன்.

அப்போது அவர் அதிமுக அமைச்சராக இருந்தார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா அவரை பதவியிலிருந்து தூக்கிவிட்டார். அது தெரிந்ததும் நான் ஆடிப்போய்விட்டேன். உடனே ஆர்.எம்.வீக்கு போன் பண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் எதுவுமே நடக்காது போல் ‘இதை பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டாம்’ என சொன்னார். ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் இந்த காரணம் முக்கியமானது’ என பேசியிருக்கிறார்.

Next Story