பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

Published on: September 28, 2023
---Advertisement---

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீசானதில் இருந்தே ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்தப் பாடலை கலாய்த்து ஏகப்பட்ட ட்வீட்களையும் மீம்களையும் போட்டு வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் காவலா, ஹுக்கும் பாடல்கள் வெளியான போது விஜய் ரசிகர்கள் அந்தப் பாடலை ட்ரோல் செய்தனர். ஆனால் அந்தப் பாடல்களின் உள்ள வரிகளில் நடிகர் விஜய்யை தான் ரஜினி வச்சு செய்துள்ளார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.

இதையும் படிங்க: இளைய மகளுடன் பட புரமோஷனுக்கு திடீரென வந்த விஜய் ஆண்டனி!.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!..

இந்நிலையில், அனிருத் அணில்ருத் இல்லை எப்போதுமே ரஜினி வெறியன் தான் என்பதை மொக்கை பாட்டு போட்டு விஜய்க்கு இவ்வளவு போதும் என விட்டுவிட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆன நிலையில், இன்னைக்கு விஜய் இருக்க வயசுல சூப்பர் ஸ்டார் இருந்தபோது, அவர் படத்தோட பாட்டை பாருங்க. பாட்ஷா பாரு பாட்டுக்கு Atleast 10% ஈடாகுமா Leo Second Single. பாட்ஷா பாரு : ஒவ்வொரு வார்த்தைகளும் வரிகளும் அனல் தெறிக்கும்  அண்ணே நீயெல்லாம் ரஜினி மாதிரி மட்டுமில்ல கமலா கூட ஆகமுடியாது…!” என மரண பங்கம் பண்ணி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்சார் பண்ண பல லட்சம் புடுங்கிட்டாங்க!. ஆதாரத்தோடு பொங்கும் விஷால்.. நடந்தது இதுதான்!..

ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலுடன் ஒப்பிட்டால் கூட லியோ செகண்ட் சிங்கிள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் அனிருத் ஏதோ அவசர கதியில் சின்ன பசங்க அழுகைக்கு ஆறுதல் சொல்ல இப்படியொரு பாட்டை போட்டுக் கொடுத்து விட்டார் என மனசாட்சியே இல்லாமல் கலாய்த்து வருகின்றனர்.

வயசானவங்களுக்கு இந்த பாட்டெல்லாம் புரியாது என ரஜினி ரசிகர்களின் ட்ரோல் ட்வீட்டுக்கு கீழ் விஜய் ரசிகர்களும் தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர். லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு அடிக்கிற அடியில் ஜெயிலர் எல்லாம் எங்கே காணாமல் போக போகுதுன்னு பாரு என வெயிட்டு காட்டி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.