அது வேற வாய்.. இது நாற வாய்!.. லோகேஷ் கனகராஜ் மேட்டரில் அந்தர் பல்டி!.. வைரலாகும் மீம்ஸ்!..
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர், கமல்ஹாசனை வைத்து விக்ரம் மீண்டும் விஜய்யை வைத்து லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜை இதுவரை கடுமையாக விமர்சித்து திட்டித் தீர்த்து வந்த ரஜினி ரசிகர்கள் தற்போது தலைவர் 171 படத்தின் அப்டேட் வந்தவுடன் அந்தர்பல்டி அடித்து மாறியதை மீம் போட்டு விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி படத்தின் மூலம் எப்படியா பட்ட ஆக்சன் பட இயக்குனர் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தார். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.
இதையும் படிங்க: கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..
நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை கடந்த ஆண்டு இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவுக்கு விக்ரம் படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது.
மீண்டும் விஜயின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்கள் உருட்டுன உருட்டுக்கு சன் பிக்சர்ஸ் சமஸ்தானமே ஆடிப்போச்சே!.. தலைவர் 171 அப்டேட் பின்னணி!
ரஜினிகாந்தை வைத்து ஜெய்லர் படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய சன் பிக்சர்ஸ் அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தற்போது மீண்டும் ரஜினியுடன் கைகோர்த்து தலைவர் 141 படத்தை உருவாக்க உள்ளதை அறிவித்துள்ளது.
தொடர்ந்து விஜய் கமல் படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜை ஹாலிவுட் படங்களை அப்படியே காப்பி அடித்து தமிழ் சினிமாவில் பிறப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என பங்கமாக கலாய்த்து வந்த ரஜினி ரசிகர்கள் தற்போது நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதை அறிந்து அப்படியே அந்தர் பல்டி அடித்து லோகேஷ் கனகராஜை கொண்டாடி வருகின்றனர் என பழைய ட்விட்டர்களை வைத்து பங்கமாக கலாய்த்த ட்ரோல் மீம் ஒன்று வைரலாகி வருகிறது.
முன்னதாக நெல்சனையும் ரஜினி ரசிகர்கள் இதேபோல கலாய்த்த நிலையில் ஜெய்லர் படத்தை நெல்சன் இயக்கும்போது அவரைக் கொண்டாட ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.