Categories: latest news

ரஜினியை பகைச்சிக்கிட்டா அவ்ளோதான்!.. ரோஜாவை போட்டு பொளக்கும் தலைவர் ஃபேன்ஸ்.. அதான் மேட்டரா?..

நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவுக்கு இந்த முறை காங்கிரஸ் கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது. ஆனால், ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் கூட்டணி வைத்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே ஹீரோவுடன் நடிக்க வந்த 10 படங்களின் வாய்ப்பு! ஐய்யயோ வேண்டாண்டா சாமி என ஓடிய வாணிபோஜன்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக இருந்த நடிகை ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசிய நிலையில், ரஜினிகாந்தை பற்றி அவதூறாக நடிகை ரோஜா பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆக்கியது.

இந்நிலையில் ரோஜாவின் தோல்வியை அடுத்து சூப்பர் ஸ்டாரிடம் தேவையில்லாமல் மோதினால் நடப்பது இதுதான் என நடிகை ரோஜாவை ரஜினிகாந்த் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்போ விஜய்யோட சிஎம் கனவு அவ்ளோதானா?.. வெயிட்டுக் காட்டிய திமுக!.. தவெக தலை எடுக்குமா?..

ரஜினிகாந்துடன் சில படங்களில் ரோஜா இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவருக்கு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்களும் நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராம்சரண் தனது சித்தப்பா பவன் கல்யாண் வெற்றி பெற்றதை கொண்டாடியுள்ளார். அவருக்காக சமீபத்தில் பிரச்சாரமும் செய்திருந்தார் ராம்சரண் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார். அந்த படத்தில் அவருடன் இணைந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி ரூட்டுதான் பெஸ்ட்! பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா.. அதுக்குதான் இந்த வொர்க் அவுட்டா?

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

3 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

5 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago