தலைவர் 171ல் இருந்து லோகேஷ் வெளியேற வேண்டும்!.. ஒரே ஒரு பிட்டு பாட்டால கொந்தளித்த ரஜினி ஃபேன்ஸ்!..

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்துள்ள இனிமேல் வீடியோ ஆல்பம் டீசர் நேற்று வெளியானது. அந்த வீடியோவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து போட்ட கும்மாளத்தை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
லியோ படம் இரண்டாம் பாதி சொதப்பலாக இருந்தாலும் விஜய் நடித்த காரணத்தினால் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அடுத்ததாக தலைவர் 171 வது படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது. ‘அதை எல்லாம் விட்டுவிட்டு ஸ்ருதிஹாசனுடன் எப்படி படு நெருக்கமாக வீடியோ பாடலில் நடிப்பீர்கள்?’ என ரஜினிகாந்த் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை டேக் செய்தே திட்டி தீர்த்து வரு்கின்றனர்.
இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..
மேலும், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக விஜய்க்கு சொதப்பியது போல சூப்பர் ஸ்டார் படத்தையும் சொதப்பி விடுவார் என்றும் தலைவர் 171 வது படத்திலிருந்து லோகேஷ் கனகராஜை ரஜினிகாந்த் நீக்க வேண்டும் என்றும் தலைவர் ஃபேன்ஸ் கொந்தளித்து உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் ஒரு சினிமா இயக்குனர். ஒரு நடிகராக வேண்டும் என ஆசைப்படுவதில் என்ன தவறு?. எத்தனையோ இயக்குனர்கள் ஹீரோக்களாக மாறி நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யவில்லையா? ரஜினி ரசிகர்கள் இன்னமும் திருந்தாமல் ஒரு படத்தை ஏன் படமாக பார்க்க மறுக்கின்றனர் என கமல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் இயக்குனர் இந்நாள் அரசியவாதி!.. அந்த பாவமான நடிகையுடன் படப்பிடிப்பில் ஒரே கசமுசாவாம்!..
‘ரஜினிகாந்த், தனுஷ் எல்லாம் ஹீரோயினுடன் கொஞ்சி குலாவி நடிக்கும் போது அமைதியாகத்தானே இருந்தீர்கள்.. இதுவெறும் ஆல்பம் பாடல் தானே அதற்குப் போய் இப்படியொரு பஞ்சாயத்தா?’ என நெட்டிசன்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.