திடீரென பாதித்த ரஜினிகாந்த் மனநிலை.. விமான நிலையத்தில் அடிதடி சண்டை!.. துணை நின்ற நம்பியார்…

Published on: April 2, 2024
---Advertisement---

Rajinikanth: தொடர்ந்து நடித்து கொண்டு இருந்த ரஜினிகாந்த் கிடைக்கும் பட வாய்ப்புகளை எல்லாம் ஓரம் கட்டாமல் நடித்தார். அது அவரின் உடல்நலத்தினை மோசமாக பாதித்தது. இதன்காரணமாக அவர் எல்லாத்துக்குமே எரிச்சலாகினார். அதனால் விமானநிலையத்தில் அடித்தடி தகராறே நடந்ததாம்.

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். வில்லனாக வந்தவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்க அவருக்கு கிடைத்த வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்தது. வரும் தயாரிப்பாளர்களை ஒதுக்க முடியாமல் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

ஒருகட்டத்தில் சம்பளத்தினை உயர்த்தி அவர்களை விரட்ட முடிவெடுத்தார். அதற்கு சிலர் குறை கூறினாலும் அதை கொடுக்கவும் தயாராக இருந்தனர். இதனால் தூங்காமல் தொடர்ச்சியாக நடித்து கொண்டே இருந்தார். இதனால் அவர் உடல் மோசமாக மாறியது. டயர்டை போக்கி கொள்ள மது அருந்தினார்.

பீடா, ஜாதிக்காய் எனச் சாப்பிட்டு வந்தார். இது அவருக்கு எரிச்சலை தந்தது. யாரை பாத்தாலும் திட்டும் மனநிலைக்கு வந்தார். சிவாஜி கணேசனின் 200வது படவிழாவுக்கு கலந்துக்கொள்ள மதுரை சென்றார். அங்கு முடித்துவிட்டு சென்னை திரும்ப விமான நிலையம் வந்து இருக்கிறார். அருகில் இருந்த கடைக்கு சென்று சோடா கேட்டாராம். அவர்கள் தீர்ந்துவிட்டதாக  கூற கடுப்பான ரஜினிகாந்த் அவரை போட்டு அடித்துவிட்டார். பிறகு பெல்ட்டை எடுத்து அருகில் இருந்தவர்களை அடிக்க தொடங்கினார். 

இதையும் படிங்க: முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..

இதனால் அவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால் சக நடிகர்கள் பேசி அனுமதி பெற்றனராம். நம்பியார் ரஜினியை பிடித்து தன்னுடைய அருகில் உட்கார வைத்து சென்னை அழைத்து வந்து இருக்கிறார். சென்னை வந்து அவரை விஜயா நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தனர்.

உடன் நம்பியார், பாலாஜி, மேஜர் சுந்தராஜன், நாகேஷ் ஆகியோர் இருந்தனராம். அப்போது அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தூங்க வைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனராம். ஒருவருடமாக தூங்காமல் இருந்த விளைவு தான் இந்த பிரச்னை என கடிந்துக்கொண்ட மருத்துவர்கள் அவரை தூங்க வைத்தே அனுப்பினார்களாம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.