லால் சலாம் டப்பிங்கை தாறுமாறா முடித்த ரஜினிகாந்த்!.. அதில் அவர் சொல்ற வசனத்தை கேட்டீங்களா?..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தெறி மாஸான வீடியோ ஒன்றையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் கேமியோவாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

இதையும் படிங்க: இருந்தாலும் இவ்ளோ நல்லவரா இருக்காரே ஷாருக்கான்!.. ஜவான் இன்னும் அந்த மைல் கல்லை தொடலையாம்!..

தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார் என்பதை அறிந்த ரஜினிகாந்த் மகளுக்காக ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுக்க முடிவு செய்து ஓகே செய்து விட்டார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும், கபில் தேவும் கேமியோவாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: லியோ படத்தில் இருந்து அந்த நடிகையை தூக்கிட்டாங்களா?.. கடைசியில லோகேஷ் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல!..

திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்தார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகளை முடித்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது போர்ஷன் டப்பிங்கை முடித்து விட்டதாக தற்போது வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தனது காரில் கெத்தாக டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்து இறங்கும் ரஜினிகாந்த் “மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை.. மனித நேயத்தை அதுக்கு மேல வை.. அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” என கம்பீரமாக பேசும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Related Articles

Next Story